. களப்பணியாளர்களின் பணி சுமை!

. களப்பணியாளர்களின் பணி சுமை!

G.K.SEKARAN,

 18 அம்ச கோரிக்கையை நிறைவேற்றக்கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர்.

  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அப்போது, 18 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி தமிழக அரசு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

  இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக களப்பணியாளர்களின் பணி சுமையை போக்கி பணிகளை முறைப்படுத்த வேண்டும், தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை மீள பெற்றிட வேண்டும், புற ஆதாரம் மற்றும் ஒப்பந்த முறை பணி நியமனத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.

   நில ஆளவர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகள் வலியுருத்தப்பட்டது.