சாலையில் நொண்டிய அரசு பஸ்! போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மக்கள்!
கு.அசோக்,
காட்பாடி ரயில்வே பாலத்தை கடப்பதே சர்கஸ் செய்வது போல உள்ள நிலையில், அரசு பேருந்து ஒன்று அங்கு பழுதடைந்து நின்றது. இதனால் பிற வாகனங்கள் போக்குவரத்தில் சிக்கித் தவித்தன.
வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகே குடியாத்தம் டூ வேலூர் வரை செல்லும் அரசு பேருந்து திடீரென பழுதடைந்து மேம்பாலம் அருகிலேயே நின்றது.
இதனால் சித்தூர் கடலூர் தேசிய நெடுஞ்சாலை கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதிப்பால் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நாள் என்பதால் சிரமப்பட்டனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேலும் புதிய மேம்பாலம் ஒன்று அமைக்க வேண்டும் இது போன்று அடிக்கடி கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் பகுதாகி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்து செல்கின்றனர்.

admin
