நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் டிராமா போட்ட வட்டாட்சியர்! ஏலகிரியில் பதற்றம்!!
த.நெல்சன்,
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிமலையில் உள்ள முத்தனூர் கிராமத்துக்கு நேற்று ஏப்-3 ஆம் தேதியன்று நூற்றுக்கணக்கான போலீசாருடன் வருவாய் அலுவலர்கள் சென்றனர்.
இது குறித்து விசாரித்த போது, முத்தனூர் மலைகிராமத்தில் சுமார் 250 பேருக்கு சொந்தமான 44 ஏக்கர் பட்டா நிலம் உள்ளது. ஆனால் இவர்களில் ஒருத்தரும் தங்கள் இடத்துக்கு செல்லமுடியாமல் தடுக்கப்பட்டுவருகிறார்கள். அதற்கு தனி நபர்களே காரணம்.
இத்தனைக்கும் நிலத்தின் பல உரிமைதாரர்கள் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்று வீடு கட்டி இருக்கிறார்கள். அதே போல் பலர் வீடு கட்டவும் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அந்த வீட்டிற்கு செல்ல உரிமையாளர்களை ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் அனுமதிப்பதில்லை.
குறிப்பாக அந்தப் பகுதியில் வசிக்கும் ரயில்வே அலுவலர் ஒருவர் தமது உறவினர்களை உடன் வைத்துக் கொண்டு இந்த இடம் எங்களுக்கு தான் சொந்தம் என்று சட்டத்துக்கு புறம்பாக உரிமை கொண்டாடி வருகிறார். அப்படி அராஜகம் செய்பவர்களிடம் சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பாகஒரு சின்ன டாக்குமெண்ட் கூட கிடையாது.
அப்படி இருக்க நிலத்தின் உரிமைதாரர்களில் ஒருவரான திருமதி பஹிம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி பல்வேறு உத்தரவுகளை பெற்றுள்ளார்.
அந்த வகையில் 33771 என்கின்ற ரீட் மனுவில் 06.03.2024 ஆம் தேதியன்று பஹிம் தரப்புக்கு சாதகமாக நீதிபதியரசர் மாண்பைமிகு திரு.ஆனந்த் வெங்கடேசன் அவர்கள் ஒரு தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில் நான்கு வாரத்துக்குள் பஹிமுக்கு சொந்தமான நிலத்தை அளந்து எல்லைக் கற்கள் அமைத்து தரவேண்டும். அந்த பணியின் போது போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதியரசர் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் ஏனோ தெரியவில்லை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் சுமார் ஒரு ஆண்டு காலம் மெத்தனமாக இருந்தனர்.
ஆகவே மனுதாரர் பஹிம் அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்தார்.
இதன் மீதான அறிக்கையை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதும் பதறிபோன அதிகாரிகள் 02.04.2025 ஆம் தேதி பிற்பகல் மூன்று மணிக்கு பஹிமுக்கு அழைப்பாணை கொடுத்து மறுதினம் ஏப்-3 ஆம் தேதி உங்கள் நிலத்தை அளந்து கொடுக்க குறு சர்வேயர் மற்றும் மோலீசாருடன் முத்தனூர் கிராமத்துக்கு வருகிறோம் நீங்கள் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தனர்.
நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி ஓராண்டுக்கு பின்னர் உத்தரவை செயல்படுத்த முன் வந்த அதிகாரிகள் ஒரு நாளுக்கு முன் தான் மனுதாரருக்கு சம்மன் அளித்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பஹீம் தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தற்போது விசாரணைக்கு வருகின்ற நிலையில்,06.03.2024 தேதியிட்ட நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியதைப்போல் ஒரு சீனை கிரியேட் செய்ய முயன்றனர் அதிகாரிகள்.
அந்த வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வருவாய் அலுவலர்கள் வட்டாட்சியர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் நில அளவை செய்ய முத்தனூர் கிராமத்திற்கு சென்றனர்.
அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய மேற்படி ரயில்வே அலுவலர் மனோகரன் என்பவர் இந்த இடத்தில் நாங்கள் 25 குடும்பங்கள் வசிக்கிறோம். நீங்கள் தாரளமாக அளவீடு செய்யுங்கள் நான் தடுக்க மாட்டேன். ஆனால் மக்கள் தடுத்தால் நான் பொறுப்பல்ல என்று அதிகாரிகளை இடைநிறுத்தி பேசினார்.
அதே சமயம் மனுதாரர் பஹிம் மற்றும் அவரது பிள்ளைகள் வட்டாட்சியரிடம், நீதிமன்ற உத்தரவை அமல் படுத்துங்கள் நீங்கள் சம்மன் கொடுத்ததன் பேரில் நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்றனர்.
ஆனால் வட்டாட்சியர் நவநீதகிருஷ்ணனும் அவருடன் வந்த அதிகாரிகளும், மனுதாரர்களுக்கு நீங்கள் இதுவரை ஏன் அங்கு செல்லவில்லை என்பதைப்போல சிலபல உதவாத அட்வைஸ் கொடுத்தனர்.
பின்னர் நீதிமன்றம் குறிப்பிட்டு சொன்ன சம்மந்தப்பட்ட நிலத்துக்கு சென்று அளவீடு செய்ய முற்படாமல் அங்கிருந்து நகர்ந்தனர்.
இந்நிலையில் நிலத்தின் உரிமையாளர்களும், குறிப்பாக மனுதாரர் பஹீம் அவர்களும் கண்ணீர் விட்டு அழுதனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குறிப்பு:- பல ஆண்டுகளாக இருந்து வரும் இந்த சர்ச்சையால் சம்மந்தப்பட்ட பேர்வழிகள் மீது எப். ஐ. ஆர். பதிவு செய்யப்பட்டு அவை நிலுவையில் இருந்தும் இதுவரை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை.

admin
