பாவம் ஏலகிரி மலை! இபோதுள்ள அதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லுங்கப்பா!
ஜி.கே.சேகரன்,
ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகளுக்காக அமைக்கப்பட்ட அம்சங்களை சீரும் சிறப்பாக கவனிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். மேலும் அங்கு ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் அவல நிலை சுற்றுலா தளத்தை கண்டுகொள்ளாத அரசு மற்றும் அரசு அதிகாரிகள் கண்டுகொள்ள வேண்டும் என்கிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் சுற்றுலாத் தளமான ஏலகிரி மலையில் உள் மாவட்ட மக்கள் வருகை புரிவது மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, என வெளி மாநிலத்திலிருந்து அதிகப்படியான மக்கள் வந்து செல்கின்றனர்.
அப்படி வருவோரில் படகு சவாரியும் செவதுண்டு.
இந்நிலையில், 15 நபருக்கு மேலாக படகில் ஏற்றப்பட்டு வருகிறார்கள். இப்படி சவாரி செய்வதால் ஆபத்து ஏற்படும் அபாயகரமான சூழல் அங்கு நிலவுகிறது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், வருமானம் ஈட்டும் நோக்கில் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

மேலும் படகு சவாரியை சுற்றியுள்ள இரும்பு வேலி கம்பி பல வருடங்களுக்கு முன்பே கீழே விழுந்துவிட்டது.
இந்த நிலையில் பொதுமக்களும் குழந்தைகளும் அந்த இடத்தில் நின்று ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கின்றனர்.
தண்ணீரில் குப்பைகளும் காலி வாட்டர் கேன்களும் மிதப்பதினால் தண்ணீர் துர்நாற்றம் வீசிவருகிறது.மேலும் கோடை விடுமுறை தொடங்க உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்பதால் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் படகு சவாரியை சுற்றி உள்ள இரும்பு வேலியை சரி செய்ய வேண்டும் எனவும் மேலும் தண்ணீரில் மிதக்கக்கூடிய குப்பைகளையும், காலி வாட்டர் கேன்களையும் சுத்தம் செய்து தண்ணீரை தூய்மையாக வைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அப்படியே நடைபாதைகளில் முளைத்திருக்கும் செடிகொடிகளை அகற்றி பாதசாரிகள் பயன்படுத்தவும் நடைபயிற்சிக்காகவும் வழிவகை செய்தால் நலம்.
தர்மேந்திர பிரதாப் யாதவ் என்கிற கலெக்டர் வேலூர் மாவட்டத்திற்கு இருந்த பொழுது, இந்த ஏலகிரிமலை கண்கவரும் வகையில் இருந்தது, இதை இப்போதிருக்கும் அதிகாரிகளுக்கு யாராவது எடுத்துச் சொல்லுங்கப்பா.

admin
