த.வெ.க நடத்திய ஆர்பாட்டம்!
G.K.சேகரன்,
திருப்பத்தூரில் தமிழக வெற்றி கழகத்தினர் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு வாரிய சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி தமிழக முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில்¢ ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் திருப்பத்தூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் முனுசாமி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பாரத ஸ்டேட் வங்கி அருகே மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மேலும் தமிழக வெற்றி கழகத்தினர் மத்திய அரசுக்கு எதிராக பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.உடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர,ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

காட்பாடியில் தமிழக வெற்றி கழகத்தினர் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
வேலூர்மாவட்டம்,காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு வாரிய சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நவீன் தலைமையில் திரளான தமிழக வெற்றி கழகத்தினர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு இஸ்லாமிய மக்களை பாதிக்கும் வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய கோரி கோஷங்களை எழுப்பினார்கள் இதில் பகுதி செயலாளர் இப்ராஹீம்,ரீகன் சங்கீத் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
அதே போல் வேலூர் நகரில் அண்ணாகலையரங்கம் அருகில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய கோரி தமிழக வெற்றி கழகத்தின் மேற்குமாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் ஆர்பாட்டமானது நடைபெற்றது. இதில் மேற்குமாவட்ட தொண்டரணி பொறுப்பாளர் இம்தியாஸ் உள்ளிட்டோரும் திரளான தமிழக வெற்றி கழகத்தினரும் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

அதே போல், இராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவை கண்டித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் பூக்கடை மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். மத்திய அரசு மதவெறுப்பு அரசியலை கைவிட வேண்டும் என தெரிவித்த த.வெ.க.வினர் உடனடியாக இசுலாமியர்களின் உரிமையை பறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள வக்பு சட்டதிருத்த மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

admin
