வழக்கு நிலுவையில் உள்ள போதே தந்தையின் அடாவடி! வேடிக்கை பார்க்கும் போலீஸ்!
ஜி.கே.சேகரன்,
அடியாட்களுடன் வந்து சொந்த மகளையே வெட்ட வைத்து வீட்டை தரைமட்டமாக்கிய தந்தை புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கையில்லை, திமுக பிரமுகரின் அடாவடி.
வேலூர்மாவட்டம், காட்பாடி வி.ஜி ராவ் நகரில் வசித்து வந்தவர் மணியம்மை. இவரது கணவர் மின்வாரியத்தில் ஓய்வு பெற்ற அதிகாரி ராஜ்மோகன். இவர் 1998 ஆம் ஆண்டு மணியம்மையை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
விஜி ராவ் நகரில் உள்ள வீட்டில் மணியம்மை அவரது மகள் ஜெயஸ்ரீ மகன் ராஜ செந்தில் குமார் ஆகிய மூன்று பேர் வசித்து வந்தனா,¢ இந்த நிலையில் மார்ச் மாதம் 2022 ஆம் ஆண்டு மணியம்மை இறந்துவிட்டார்.
இந்த நிலையில் தனியாக வசித்து வந்த ராஜ்மோகன் மணியம்மை வசித்த வீடு தனக்கு தான் சொந்தம் என உரிமை கொண்டாடினார்.
இதனால் ஜெயஸ்ரீயும் ராஜ செந்தில்குமார் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் துத்திப்பட்டு திமுக ஊராட்சிமன்ற தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் ராஜ் மோகன் மகள் ஜெயஸ்ரீ வீட்டிற்கு நேற்று வந்து மகள் ஜெய ஸ்ரீயை அடியாட்களுடன் தாக்கி கையை கத்தியால் வெட்டி அடியாட்களை கொண்டே மகளின் உடைகளை கிழித்தெறிந்து மானபங்கம் செய்ய முயன்றுள்ளனர்.

மேலும், வீட்டை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து தரைமட்டமாக்கிவிட்டார். இதுகுறித்து காட்பாடி காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டும் அவர்கள் செய்யும் அராஜக செயலை சொல்லி புகார் அளித்தும் காவல்துறை கண்டுகொள்ளவில்லை.
மேலும் ஜெயஸ்ரீ அணிந்திருந்த 2 சவரன் தங்கநகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த ஜெயஸ்ரீ வேலூர் பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரையில் காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை வழக்குபதிவு செய்ய முன் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
சொந்த மகளையே அடியாட்களை கொண்டு வெட்டி மானபங்கப்படுத்திய தந்தையால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

admin
