ஸ்டேஷனில் கையெழுத்து போட வந்த நபரை கொலை செய்த முதலாளி!

ஸ்டேஷனில் கையெழுத்து போட வந்த நபரை கொலை செய்த முதலாளி!

கு.அசோக்,

திமுக ஒன்றிய கவுன்சிலரை வெட்டிய வாலிபரை பழிக்கு பழியாக கொலை செய்த மர்ம கும்பல், நால்வர் சரண்.

 இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அம்மனூர் பகுதியை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் அஸ்வினியின் கணவர் சுதாகர். இவர் பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவரிடம் அவினேஷ் என்கிற வாலிபர் வேலை செய்து வந்தார்.

 இந்நிலையில் இவர்கள் மது அருந்திக் கொண்டிருந்த போது சுதாகர் அவினேஷின் தாயை இழிவாக பேசியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவினேஷ் சுதாரை ஏப்ரல் 19 ஆம் கத்தியால் வெட்டினார்.

 இந்த வழக்கில் அவினேஷ் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் வெளியில் வந்துள்ளார். அப்படியிருக்க அவினேஷ்  இராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்து செல்வதை சுதாகர் தரப்பினர் நோட்டமிட்டுள்ளனர்.

அதில் நேற்று கையெழுத்து போடுவதற்காக அரக்கோணத்தில் இருந்து ரத்தினகிரிக்கு அவினேஷ் வந்த போது, அவரை சிலர் பட்டாகத்திகளுடன் கொலை செய்ய முயன்றனர்.

  அப்போது அவினேஷ் தப்பி செருப்புகடை ஒன்றுக்குள் ஓடினார். இருந்த போதும் விடாத கும்பல் அவரை துரத்திச்சென்று  சரமாரியாக வெட்டிவிட்டு காவல் நிலையத்தில் சரண்டர் ஆனார்கள்.

  மர்ம கும்ப கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டியதில் படுகாயம் அடைந்த அவினேஷ் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இறந்தார்.

   சம்பவ இடத்தை டிஎஸ்பி இமயவர்மன், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.