மாணவர்களுக்கு உணவுபடி கொடுங்கள்!
ஜி.கே.சேகரன்,
மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும் வேலூரில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் தீர்மானம்.
வேலூர்மாவட்டம்,வேலூரில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் தேவி செல்வம் தலைமையில் நடைபெற்றது இதில் மாநில பொது செயலாளர் பெரியதுரை செயற்குழுவை துவங்கி வைத்தார்.ரி
இதில் மாவட்டத்தலைவர் ஹென்றி அமிர்தராஜ் நிர்வாகிகள் குமார்,தினகரன்,மாநில பொருளாளர் தமிழ்செல்வன் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள உடற் கல்வி இயக்குநர்கள் திரளானோர் கலந்துகொண்டனா.¢
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:- நீண்ட நாள் கோரிக்கையான 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு உடற்கல்வி பாடபுத்தகம் வெளியிட்டதற்கு நன்றி.
மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும்.
விளையாட்டு போட்டிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் உணவு போன்ற படியினை தனி கணக்கில் வைத்து வழங்க வேண்டும்.
தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் விளையாட்டு உபகரணங்கள் வாங்க ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்க வேண்டும்.
விளையாட்டுக்கு வீரர்களுக்கு பொறியியல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் இட ஒதுக்கீடு அளிக்கவும் விடுதி காப்பாளர்கள் பணியிடங்களில் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு பணிபாதுகாப்பு சட்டம் தேவை உள்ளிட்ட 26 தீர்மானங்கள் இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

admin
