குடிதண்ணீர் வேஸ்ட்! ஊராட்சி பணீயாளர்கள் வேடிக்கை!

குடிதண்ணீர் வேஸ்ட்! ஊராட்சி பணீயாளர்கள் வேடிக்கை!

கு.அசோக்,

வன்னிவேடு கிராமத்தில் உள்ள கிராம பணியாளர்களின் அலட்சியத்தால் குடிநீர் தொட்டியிலிருந்து தண்ணீர் சாலைகளில் ஓடியது.

 இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த வன்னிவேடு ஊராட்சியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே பிரம்மாண்டமான முறையில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

 ஊராட்சி பணியாளர்கள் சார்பில் நாள்தோறும் நீர்த்தேக்க தொட்டிக்கு மோட்டார் மூலமாக குடிநீர் நிரப்பி அதன் பின்னர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுவது வழக்கம்.

  இந்த நிலையில் வழக்கம் போல் நீர்த்தேக்க தொட்டிக்கு மோட்டார் மூலமாக குடிநீர் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது ஆனால் நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் முழு கொள்ளளவும் எட்டியும் மோட்டார் நிறுத்தப்படாததால் குடிநீர் முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளியேறி வீதிகளில் பெருக்கெடுத்து ஓடியது.

 மேலும் கோடை காலம் என்பதால் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் உள்ளாட்சி  பணியாளர்களின் அலட்சியத்தால் குடிநீர் வீதிகளில் பெருக்கெடுத்து வீணாகி வருவது வேதனைக்குரியது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஏன்னா இப்படி அடிக்கடி நடந்துவிடுகிறதாம்.