நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க மறுக்கும் மாவட்ட நிர்வாகம்!

நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க மறுக்கும் மாவட்ட நிர்வாகம்!

கு.அசோக்,

  நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கி கிராமத்தில் முளைத்த நெல்லுடன் விவசாயிகள் ஆர்பாட்டம்

  இராணிப்பேட்டை மாவட்டம், மேல் வீராணம் கிராம பகுதியில் செயல்பட்டு வந்த அரசு நேரடி மேல் கொள்முதல் நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளது. அதன் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

  கிராம மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாக நம்பியுள்ளனர்.

  தற்போது அறுவடை செய்த அனைத்து நெல் மூட்டைகளும் நெல் களம் மற்றும் பொது இடத்தில் குவிக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டு இருப்பதால் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக நெல் மூட்டைகள் சேதம் அடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

  மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்திருக்கும் நிலையிலும் அவை திறந்தபாடில்லை.

   நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் இருப்பதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து இருப்பதாகவும்  எனவே மாவட்ட நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நெல் முட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கினர்.

   பின்னர் தங்களின் கிராமமான மேல்வீராணம் கிராமத்தில் முளைத்த நெல்லுடன் விவசாயிகள் தங்களின் வேதனையை வெளிப்படுத்தி நெல் கொள்முதல் நிலையத்தினை திறந்திட கோரி கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.