மகளிர் போலிசாரால் மனமுடைந்தேன்! செத்தவர் பரபரப்பு வாக்கு மூலம்!
ஜி.கே.சேகரன்,
மனைவியை கத்தியால் குத்திய கணவன்! மனைவிக்கு தகாத உறவு இருந்ததால் கத்தியால் குத்தினேன் எனவும் ஒரு தலை பட்சமாக திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் செயல்பட்டதாக வீடியோ பதிவு செய்து தற்கொலை! திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உறவினர்கள் சாலை மறியல் முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலப்பட்டு அடுத்த கல்லு குட்டை பகுதியைச் சேர்ந்த பிரகாசம் மகன் பிரவீன் (30), இவர் சென்னையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் சேர்ந்த சக்திவேல் மகள் நந்தினி (28) என்பவரை திருமணம் செய்து குழந்தைகள் ஏதும் இல்லாத நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
எனவே, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கணவனிடமிருந்து பிரிந்து தனது அம்மா வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து நந்தினி புதுப்பேட்டை ரோடு பகுதியில் உள்ள ஸ்ரீராம் பைனான்ஸில் டாக்குமெண்ட் ஸ்டாப்பாக வேலையும் செய்து வந்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க கணவன் பலமுறை தனது மனைவியை அழைத்தும் வராத காரணத்தினால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் பிரவின்.
இந்த நிலையில் கடந்த ஜூன் 29 ஆம் தேதி ஸ்ரீராம் பைனான்ஸ்க்கு சென்ற கணவன் தனது மனைவியை தனியாக அழைத்து தன்னிடம் வர அழைத்துள்ளார். ஆனால் மனைவி வர மறுத்ததால் புதுப்பேட்டை ரோடு பகுதியில் பிரவீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக மனைவின் உடம்பில் பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார்.
இதனால் மனைவி அலறி உள்ளார் இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு நந்தினியை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் காரணமாக திருப்பத்தூர் நகர போலீசார் பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனா.¢ அதன் பின்னர் சிறை சென்று வந்த பிரவீன் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் தினந்தோறும் நேரில் வந்து கண்டிஷன் பெயில் காரணமாக கையெழுத்திட்டு வந்துள்ளார்.
அதேபோல் நேற்று மன உளைச்சலில் இருந்த பிரவீன் தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீடியோ ஒன்றை பதிவு செய்து வலைதளங்களில் பரவை செய்துள்ளார்.
அதில் எனது மனைவியான நந்தினி என்பவருக்கும் ஸ்ரீராம் பைனான்ஸில் வேலை செய்து வந்த ஸ்ரீதர் என்பவரும் வாட்ஸ் அப்பில் சேட்டிங் செய்து வந்ததாகவும், இதன் காரணமாக தட்டி கேட்கும் பொழுது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் நான் அவரை கத்தியால் குத்தினேன்.
அதன் பின்பு தற்போது சிறை சென்று வந்துள்ளேன். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் என அழைத்துச் சென்று அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கினர்.
¢மேலும் தான் வாங்காத நகையை கொடுக்கும்படி என்னை வற்புறுத்தி எனது மனைவிக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக செயல்பட்டனர்.
இதன் காரணமாக தற்போது மிகவும் மன உளைச்சலில் இருந்து வருகிறேன் எனக்கூறி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
மேலும் இனிமேல் நான் இருக்கப் போவதில்லை என விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வதாக கூறியும் வீடியோவை பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக இவருடைய உறவினர்கள் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மற்றும் நந்தினி மற்றும் அவருடைய தாயார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர்.மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதின் பெயரில் அனைவரும் கலந்து சென்றனர்.
இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு காணப்பட்டது.

admin
