அனைத்து மாநில அமைச்சர்கள் கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன்! எ.வ.வேலு பேட்டி!
ஜி.கே.சேகரன்,
மத்திய அரசு நடத்தும் ஆய்வுக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் நான் கலந்து கொள்கிறேன், மத்திய அரசு தமிழகத்திற்கு எந்தவிதமான நிவாரண நிதிக்கும் சாலைகள் மேம்பாடு உள்ளிட்ட பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில்லை மாநிலத்தில் 70 ரயில்வே மேம்பாலங்கள் கடந்த ஆட்சியில் சரியாக நில எடுப்பு செய்யாததால் அப்படியே பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதனை சரி செய்து வருகிறோம் என பொதுபணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டி.
வேலூர்மாவட்டம், வேலூரில் பழைய அரசு மருத்துவமனையில் 150 கோடியில் புதிய மருத்துவமனை கட்டும் பணிகள் நடக்கிறது. அதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன்ம் ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு செய்தியாளர்களிடம் கூறுகையில் வேலூரில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை 2025 மார்சுக்குள் கட்டி முடிக்க நடவடிக்கையை எடுத்து வருகிறோம். இங்கு 10 அறுவை சிகிச்சை மையங்களும் உள்ளடங்கும் படி கட்டப்பட்டிருக்கிறது.
கடந்த மழையின் போது தென் மாவட்டங்களான தூத்துகுடி திருநெல்வேலி ஊட்டி ஆகிய இடங்களில் மழையால் பாலங்கள் பாதைகளும் சேதமடைந்துள்ளது இதனை மாநில அரசு நிதியில் சரி செய்கிறோம் மத்திய நிதி அமைச்சரை அழைத்து சென்று காட்டியும் நிதி வழங்கவில்லை.
எத்தனை முறை தன கேட்பது? மத்திய அரசை குறை சொல்லும் நோக்கில் சொல்லவில்லை, அவர்கள் எதனையும் செய்யவில்லை, இதற்காக 750 கோடி செலவு செய்துள்ளோம். மாநிலத்தில் பலபாலங்களை வேகமாக கட்டி மக்கள் பயன்பாட்டிற்காக எளிதாக முறையில் திறந்து வருகிறோம்.
தமிழகத்தில் காலாவதியான சுங்கசாவடிகளை மூட பல முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும், நேரிலும் வலியுறுத்தினோம் ஆனால் மத்திய அரசு அவைகளை மூட முடியாது தொடர்ந்து செயல்படும் என்று சொல்கிறார்கள்.
வசூலிக்கும் தொகையை குறைத்து வசூலிக்க கூறுகிறோம் அவர்கள் கவனிக்கவில்லை.
நிதின் கட்கரி தமிழகத்தில் சாலைகளை பார்வையிட்டு சிறப்பாக இருப்பதாக கூறினார். மத்திய அரசு தலைமையில் அனைத்து மாநில அமைச்சர்களை கொண்டு வரும் 30 ஆம் தேதி ஆய்வு கூட்டம் நடத்தவுள்ளனர். அதில் தமிழகத்தின் சார்பில் நான் கலந்து கொள்ளவுள்ளேன்.
கடந்த ஆட்சியில் 70 ரயில்வே மேம்பாலம் நில எடுப்பு செய்யாமலேயே டெண்டர் பணிகளை செய்துவிட்டனர். தற்போது அதற்கான நில எடுப்பினை செய்து பாலம் முழுமை பெற சிறப்பு வருவாய் அலுவலர்கள் நிலம் எடுப்பிற்காக மாநிலம் முழுவதும் 5 பேரை நியமித்துள்ளனர்.
கடந்த ஆட்சியில் 6.28 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு சென்றனர் நாங்கள் வட்டியை கட்டுவதா? வளர்ச்சி பணிகளை செய்வதா விரிஞ்சிபுரம் மேம்பாலம் விரைவில் கட்டி முடிக்கபடும் இலங்கை முகாம் மின்னூரில் வீட்டின் உரிமையாளர்களே இடித்து அழுகு படுத்தும் பணி செய்ததால் பாதிப்பு ஏற்பட்டது என சொன்னார்.

admin
