தேனீக்கள் கொட்டியதில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி!

தேனீக்கள் கொட்டியதில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஜி.கே.சேகரன்,

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த இந்திரா நகர் பகுதியில் சாலையோரமாக பெரிய அளவில் புளியமரம் உள்ளது. அந்த மரத்தில் தேனீகள் கூடு கட்டி இருந்துள்ளது.

 இந்நிலையில் அந்த தேன் கூட்டில் எவரோ கல் எறிந்துள்ளார்கள். அதனால் மரத்திலிருந்து வெளியேறிய தேனீக்கள் சாலையில் சென்றவர்களை துரத்தி துரத்தி கொட்டியது.

 மக்கள் அலறடித்துக் கொண்டு ஓடிய போதிலும் தேனீக்கள் துரத்தி துரத்தி கொட்டியதில் பலர் காயம் அடைந்துள்ளனர்.

 காயம் அட்ய்ந்தவர்களை  அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் தேவராஜ், நாகராஜ், காஞ்சனா, மூதாட்டி புஷ்பா ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரித்து..... தேனி மீது நடவடிக்கை எடுப்பார்களோ?