டாக்டரின் ஆண் உறுப்பை அறுத்த நர்ஸ்!

டாக்டரின் ஆண் உறுப்பை அறுத்த நர்ஸ்!

ம.பா.கெஜராஜ்,

 டாக்டர்களுக்கு இது போறாத காலம் போலிருக்கிறது. ஏனென்றால் தற்போது ஆங்காங்கே அவர்கள் உதைபடும் செய்திகள் தான் வெளியாகிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்றைய செய்தியில் பீகாரில் ஆண் உருப்பை நர்ஸிடம் இழந்த மருத்துவர் பற்றியும், நோயாளியைப் பார்க்க வந்தவர்களிடம் தர்ம அடிவாங்கிய மருத்துவரைப் பற்றியும் செய்தியே பிரதான இடத்தை பிடித்துள்ளன.

  செருப்பு போட்டுக்கொண்டு நோயாளியை பார்க்க வரக்கூடாது என்று எச்சரித்த மருத்துவரை மூன்று இளைஞர்கள் சேர்ந்து புரட்டி எடுத்தனர். பதிலுக்கு மருத்துவரும் ஆவேசப்பட்டு தாக்குதலில் ஈடுபட்டார். அருகில் உள்ள ஸ்டீல் ஸ்டூலை எடுத்து அடிக்க பாய்ந்த அவரை அருகில் இருந்தவர்கள் தடுத்து ஆசுவாசப்படுத்தினர்.

  மாநிலத்தில் 'அவசர சிகிச்சை பிரிவுக்குள் காலணி அணிந்து வர வேண்டாம்' என அறிவுறுத்திய மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர்கள் தாக்கியுள்ளனர்.

 குஜராத் மாநிலம், பவன்நகர், சிகுர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண்ணை  காண வந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.

 இந்நிலையில் மருத்துவரை தாக்கிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஆனால் மருத்துவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  ஆணுறுப்பை அறுத்து.....!

  கடந்த புதன்கிழமை அன்று  பீகார் மாநிலம் பாட்னாவை அடுத்த கங்காபூரில் உள்ள ஆர்பிஎஸ் ஹெல்த் கேர் சென்டர் என்கிற தனியார் மருத்துவமனையில் ஒரு விபரீதம் நடந்திருக்கிறது.

  அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியரை மருத்துவர் குமார், மற்றும் அதே மருத்துவமனையில் பணியாற்றி வந்த சுனில் குமார் குப்தா மற்றும் அவதேஷ் குமார் என்கிறஅ மூவரும்¢ கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய  முயற்சித்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க செவிலியர் தன் கையில் கிடைத்த பிளேடு கொண்டு மருத்துவர் குமாரின் ஆணுறுப்பை அறுத்துள்ளார்.

இதையடுத்து, மூவரிடம் இருந்து தப்பிய செவிலியர் மருத்துவமனையில் மறைந்திருந்து காவல் நிலையத்திற்கு அழைப்பு விடுத்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மருத்துவமனையில் இருந்த மருத்துவர் மற்றும் இருவரை கைது செய்தனர். விசாரணையில் மருத்துவர் உள்பட மூவரும் மதுபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. "ஆபத்தான காலக்கட்டத்தில் செவிலியரின் செயல்பாடு மிகவும் பாராட்டுக்குரியது," என காவல் துறை துணை கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் பாண்டே தெரிவித்தார்.

 ஆனால் மருத்துவர் குமாரின் ஆண் உறுப்பு துண்டானதா அல்லது காயம்மட்டும் ஏற்பட்டதா என்பது பற்றி தெளிவான தகவல்கள் இல்லை...சாரி.

 முஸ்ரிகராரி காவல் நிலைய வட்டத்திற்குள் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அரங்கேறிய கூட்டு பாலியல் வன்புறவு முயற்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.