விரைவில் திறப்பு விழா காணப்போகும் டைட்டில் பார்க்! ஆய்வு குழு தலைவர் நந்தகுமார் பேட்டி!
ஜி.கே.சேகரன்,
வேலூர்மாவட்டத்தில் தமிழக சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு பல இடங்களில் ஆய்வு குழு தலைவர் நந்தகுமார் பேட்டி
வேலூர்மாவட்டம்,வேலூர் அப்துல்லாபுரத்தில் உள்ள டைட்டில் பார்க், குடியாத்தம் பகுதியில் கட்டப்பட்ட அறிவுசார் மையம், பள்ளிகொண்ட அம்ருத் குடிநீர் திட்டம்,கேவிக்குப்பம் பகுதியில் வீட்டுவசதி வாரிய இடங்கள், விருதம்பட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், தொரப்பாடி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களை தமிழக பொது நிறுவனங்கள் குழு அதன் தலைவர் நந்தகுமார் தலைமையில் ஆய்வு செய்தனர்.
இந்த குழுவில் உயர் அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களான ஜவாஹிருல்லா, வேலு, கடாம்பூர் ராஜு உள்ளிட்டவர்கள் இடம் பெற்றிருந்தனர்.
மதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்துறை அதிகாரிகள் பங்கேற்று பல்துறை அதிகாரிகளும் தங்களின் பணிகளை விளக்கி கூறினார்கள்.
அதன் பின்னர் குழு தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் பொது நிறுவனங்கள் குழு வேலூர், காட்பாடி,அனைக்கட்டு கேவிகுப்பம்,குடியாத்தம் ஐந்து தொகுதிகளில் பல பணிகளை ஆய்வு செய்தோம்.
பொது நிறுவனங்கள் குழு 2021 ஆம் ஆண்டு 67 நிறுவனங்களை கொண்ட இந்த குழுவானது 93 ஆயிரம் கோடியாக இருந்தது. தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பின்னர் 2022 ஆம் ஆண்டு 1.89 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் பார்க்கும் போது, 5207 கோடி ரூபாயாக இருந்த நஷ்டமானது 2022 ஆம் ஆண்டில் ரூ.3862 கோடியாக குறைத்துள்ளோம்.
நாங்கள் ஆய்வு மேற்கொண்டதன் வாயிலாக பல பிரச்சணைகளை விவாதித்துள்ளோம். மாவட்டத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களும் செய்யப்படும். ஏழை எளிய மக்களுக்கு என்ன நன்மை செய்ய முடியுமோ அதனை செய்ய அறிவுறுத்தியுள்ளோம்.
அப்துல்லாபுரம் டைட்டில் பார்க் முதலில் ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் பணியை முடிக்காத காரணத்தால் மீண்டும் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது, இன்னும் 6 மாத காலத்திற்குள் டைட்டில் பார்க் பணிகள் முடியும்.
டைட்டில் பார்க் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தான் மகிழ்ச்சியளிக்க கூடிய செய்தியாகும்.
இதனால் படித்த சகோதரர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் கள ஆய்வு செய்தது மிகவும் நிறைவாக உள்ளது டைட்டில் பார்க் திறப்பு விழா விரைவில் நடக்கும்.
பள்ளிகொண்டா அம்ருத் திட்டம் வேலைகளும் நடந்து வீடுகளுக்கு இணைப்பு வழங்கவுள்ளோம். குடியாத்தம் அறிவுசார் மையத்தினையும் ஆய்வு செய்தோம். குடியாத்தம் 40 கோடியில் மருத்துவமனை கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தோம். 300 படுக்கைகளுடன் அங்கு மருத்துவமனை வரும் 150 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயனடைவார்கள்.
கேவிகுப்பம் ஹவுசிங்க் போர்டு இடம் பைபாஸ் வேலை முடிந்தவுடன் மக்களுக்கு விற்கப்படும். இது அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கும்.
காட்பாடி சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தோம், பாதாள சாக்கடை திட்டம் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. அது பாலாற்றை கடந்து கொண்டு செல்ல நீர் வளத்துறை அனுமதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த பணிகளும் முடிகப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வரும் அம்ருத் பணிகள் வேகம் குறைவாக நடக்க காரணம் பாதாள சாக்கடை பணிகள் தான்.
மேலும் தெருக்கள் வீடுகள் மத்தியிலும் பாறைகள் வருவதால் அவைகளை வெடிவைத்து தகர்க்க முடியாது. அதனை வெட்டி எடுத்து வருவதால் சங்கரன் பாளையம் உள்ளிட்ட இடங்களில் பணிகள் தாமதமாக நடக்கிறது, இதனை விரைந்து முடிக்க வேண்டும்.
அம்ருத் மற்றும் பாதாள சாக்கடை இரண்டும் 60 -70 சதவிகிதம் வரையில் முடிவடைந்துள்ளது. மேலும் 13 ஆண்டுகளாக நடக்கும் பாதாள சாக்கடை பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளது. குடியாத்தம் அரசு மருத்துவமனை தெருக்கள் ஆக்கிரமிப்பை அகற்ற ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
புதிய பேருந்து நிலைய கடைகள் கட்டப்பட்டுள்ளது அரசின் வரையறைக்குட்பட்டு கடைகள் பொதுப்பணித்துறையால் வரையறுக்கப்பட்ட தொகை அதிகமாக இருப்பதால் அதனை யாரும் எடுக்க முன் வரவில்லை அதனை குறைத்து கொடுக்கும் போது கடைகள் ஏலம் விடப்படும் என சொன்னார்.

admin
