அன்புமணியை தோற்கடிப்பது தான் முதல் வேலை! காடுவெட்டி குருவின் மகள் திமுகவுக்கு ஆதரவு?
ம.பா.கெஜராஜ்,
பாமகவில் போர்படைத்தளபதியாக பார்க்கப்பட்ட காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை இந்த தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அன்புமணிக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2019 தேர்தலில் இருந்து திமுகவுக்கு ஆதரவு கொடுத்து வருகிறோம். இப்போ முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமுதாய மக்களுக்கு உரிய பங்கீடு அளிக்கப்பட்டும் என சொல்லி இருக்காங்க.
எங்களுக்கான ஒரு உரிய அங்கீகாரத்தை திமுக தொடர்ச்சியாக செய்து வருகிறது. அன்புமணியும், எடப்பாடி பழனிசாமியும் வன்னியர் சமுதாய மக்களுக்காக எதையும் செய்யவில்லை.
இந்த சமுதாயத்துக்காக தான் பாமக என்ற கட்சி உருவாக்கப்பட்டது. எப்படி அன்புமணி என்னுடைய தந்தை குருவுக்கு துரோகம் செய்தாரோ, அப்படித்தான் இப்போ அவருடைய அப்பா ராமதாஸுக்கு துரோகம் செய்துள்ளார்.
அன்புமணியை தோற்கடிப்பது தான் எங்களுடைய முதல் வேலை. இதற்காக கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம் செய்வோம்.
என்னுடைய அப்பா காடுவெட்டி மருத்துவமனையில் இருந்த சமயத்தில் அவருடன் இருந்தது நான். ஒரு தடவை அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. இரண்டாவது தடவை வந்தபோது, அப்படியே விட்டுடுங்க. பணமெல்லாம் செலவு பண்ண வேண்டாமென சொன்னவர் அன்புமணி என பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் விருதாம்பிகை.
குறிப்பு:- அவருடைய சகோதரர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

admin
