கையில் கலர் கயிறும் - டீ சர்டும்...... தென்மாவட்ட மாணவர்களிடையே ஜாதி பிரச்சனைக்கு காரணமா?

கையில் கலர் கயிறும் - டீ சர்டும்...... தென்மாவட்ட மாணவர்களிடையே ஜாதி பிரச்சனைக்கு காரணமா?

கே.ஏ.ஜெகதீஸ்வரி,

 தென் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் பலவற்றில் ஜாதி ரீதியில் மாணவர்கள் மோதிக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. கையில் கலர் கயிறு கட்டுவது டீ சர்ட் அணிவது போன்றவையே இதற்கு காரணம் என்று பலரும் பொங்குகிறார்கள்.

  திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அதிக அளவில் பள்ளி மாணவர்களிடையே ஜாதிய ரீதியான மோதல் ஏற்படுகிறது இதற்கு முதன்மையான காரணம் மாணவர்களை பள்ளி நிர்வாகம்   

  நெல்லை மாவட்டத்தை பொருத்தம்பட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட ஆதிக்க சமூகங்கள் இருக்கின்றன.இவர்கள் பட்டியல் சமூகத்துடன் எப்போதும் மோதல் போக்கை கையிலெடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

  சமூக ரீதியிலான கோயில் திருவிழாக்கள் தொடங்கி பாடல் ஒளிபரப்புவது முதல் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து பயணிக்கும் போது கூட மாணவர்களிடையே ஜாதிய மோதல்கள் வளர்கிறது. கல்லூரிகளில் தங்கள் சமூகப் பெண்ணை வேற்று சமூகத்தைச் சார்ந்தவர் காதலித்தால் உடனடியாக அந்த பெண்ணின் சமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் மாற்று சமூக மாணவர் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

 பள்ளிகளில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளாக இருந்தாலும் சரி, கிராமங்களில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகள் கல்லூரியில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் ஜாதி ரீதியிலான மோதல் வருவதால் அதனை அரசு கட்டுப்படுத்தி வருகிறது.

   கையில் கயறு கட்டுவதும், டீசர்ட் அணிவதிலும் சாதி ரீதியாக குறியீடுகளை வைத்து இளைஞர்கள் இந்தப் பகுதிகளில் இருப்பதாக சமூக பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.

   அரசு அலுவலகங்களிலும் காவல் நிலையங்களிலும் ஜாதி ரீதியிலான அதிகாரிகள் அதிகம் இருப்பதாகவும் அவர்கள் ஜாதிய ரீதியில் செயல்படுவதாகவும் தங்கள் ஜாதியை சேர்ந்தவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதாகவும் புகார்கள் வருகிறது.

  இம் மாவட்டங்களில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளை சொந்த மாவட்டத்திலேயே பணியமர்த்தக் கூடாது என்கின்ற சமூக ஆர்வலர்கள் அவர்களை வேறு மாவட்டத்திற்கு அனுப்ப வேண்டும். வேறு மாவட்ட காவல் அதிகாரிகளை இந்த மாவட்ட காவல் அதிகாரிகளாக வைக்க வேண்டும் அப்போதுதான் இங்கு சமூக ரீதியான பிரச்சனைகளை தடுக்க முடியும் என்கின்றனர்.

 கல்லூரிகளை பொருத்தமட்டில் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் கல்லூரி நிர்வாக முதல் ஜாதி ரீதியில் செயல்படுவதாக புகார்கள் வருகிறது.

 ஆசிரியர்களே குழுக்களாக மாணவர்களை பிரிப்பதாகவும் கல்லூரிகளில் பேராசிரியர்கள் மாணவர்களை ஜாதி ரீதியில் பிரித்து வைப்பதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

 சாதிய சங்கங்களுடன் தொடர்பில் இருப்பவர்களே அரசு பதவியில் இருப்பதாகவும் அவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.