பல் மருத்துவமனையில் எட்டு பேர் இறந்தனரா! விளக்கமளித்த சங்கம்!

பல் மருத்துவமனையில் எட்டு பேர் இறந்தனரா! விளக்கமளித்த சங்கம்!

 ஜி.கே.சேகரன்,

  ஒன்றரை  மாதங்களுக்கு மேலாக மூடப்பட்ட பல் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டதாகவும், 8 பேர் உயிரிழந்ததாக ஐ. சி எம்.ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் தவறு என பல் மருத்துவர் அறிவழகன் மற்றும் அகில இந்திய பல் மருத்துவர் சங்கங்களின் குழுவினர் குற்றச்சாட்டு. மாசடைந்த உப்பு கரைசல்கள் பயன்படுத்துவதால் கூட தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என தகவல்.

  திருப்பத்தூர் மாவட்டம், வாணயம்பாடி கச்சேரி சாலையில் செயல்பட்டு வந்த (வி.டி.எஸ் ) பல் மருத்துவமனையில் கடந்த 2023 ஆம் ஆண்டில் சிகிச்சை பெற்றவர்கள் 8 பேர் தொற்று ஏற்பட்டு உயிரிழந்ததாக ஐ சி எம் ஆர் அறிக்கையை வெளிவந்தது. 

  அதைத் தொடர்ந்து செய்தித்தாள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் ஞானமீனாட்சி மருத்துவமனையில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அகில இந்திய பல் மருத்துவர் சங்கங்களின் துணைத் தலைவர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது

  அப்போது  அகில இந்திய பல் மருத்துவர் சங்கங்களின் துணைத் தலைவர் கோகுல்ராஜ் மற்றும் மருத்துவக் குழுவினர் அளித்துள்ள பேட்டியில்: இந்திய பல் மருத்துவமனை சங்கங்களின் அடிப்படையில் அரசு விதிப்படி அரசின் நெறிமுறைகளின் படி தான் பல் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.

  ஆகவே பொதுமக்கள் அச்சமின்றி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்லலாம். மூடப்பட்ட மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டு அதன் மூலமாக ஐ.சி எம் ஆர் அறிக்கை  வெளியிட்டுள்ளன.

  மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனரின் ஆய்வுக்கு பின்னர் மீண்டும் அந்த மருத்துவமனை நீங்கள் நடத்தலாம் என அறிக்கை அளித்தனர்.

   பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னரே நாங்கள்  மீண்டும் அறிவு பல் மருத்துவமனை என்ற பெயரில் நடத்தி  வருகிறோம்.

  ஆனாலும் சுகாதார இணை இயக்குனருடன் வந்தவர்கள் முதல் முறை பரிசோதனை செய்யப்பட்டு அதில் தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை என அதிகாரப்பூர்வமாக தெரிவித்து சென்றனர்.

 ஆனால்  மீண்டும் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக மூடப்பட்ட மருத்துவமனையில் இரண்டு மூன்று முறை பரிசோதனை எடுத்து சென்றனர். இது எதற்காக எடுத்துச் சென்றனர் என்ற தகவல் கூட எனக்கு முழுமையாக அளிக்கவில்லை.

  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மருத்துவமனையில் எடுத்துச் செல்லப்பட்ட பரிசோதனையின் போது கோவிட் போன்று மழைக்காலம் என்பதால் மாசடைந்த உப்பு கரைசல்கள் பயன்படுத்துவதால் கூட தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்பதால் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அரசு பொது சுகாதாரத்துறை மூலம் இது போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன.

  ஆனால் 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தொற்று பரவியதாக வந்த  அறிக்கை முற்றிலும் தவறானது எங்களின் மருத்துவமனையில் 3 பேர் மட்டுமே சிகிச்சை மற்றும் அறிவுரை கேட்டுச் சென்றதாகவும் கடைசியாக சிகிச்சைக்கு வந்த இந்திராணி என்பவரின் மகன் ஸ்ரீராம் என்பவர் மருத்துவமனையின் ஷட்டரில் எட்டு பேர் சிகிச்சை பெற்று இறந்ததாக நோட்டிஸ் ஒட்டினர்.

   ஐ சி எம் ஆர் அறிக்கை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு போடுவது தொடர்பாக இந்திய பல் மருத்துவர் கவுன்சிலிங் சங்கத்தின் மூலமாக பேசப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

 ஆனாலும் ஏற்கனவே இந்த அரசின் கீழ் செயல்பட்ட மாவட்ட சுகாதார இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையில் தொற்று எதுவும் ஏற்படுவதற்கான அறிகுறி இல்லை என அறிக்கை அளித்து விட்டு சென்ற நிலையில் மீண்டும் இந்த சம்பவம் ஐ.சி.எம்.ஆர் அறிக்கை மூலம் பரப்பரப்பாக பேசப்பட்டு செய்திகள் வெளியாகியுள்ளது.

 இந்த  நிலையில் தற்போதுள்ள மாவட்ட சுகாதார இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டு வருவது எதற்காக? அல்லது ஐ சி எம் ஆர் அளிக்கப்பட்ட அறிக்கை தவறானதா என பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.