அண்ணாமலைக்கு பை பை....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா ஜவ்வுமிட்டாய் இழுப்புக்கு முற்றுபுள்ளிவைத்த பாஜக… காங்கிரஸ்!
ம.பா.கெஜராஜ்,
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா ஜவ்வுமிட்டாய் கணக்காய் இழுத்துக் கொண்டிருந்த சீட்டுக்கான பட்டியலை பாஜகவும் காங்கிரஸிம் வெளியிட்டிருக்கின்றன. இதில் அண்ணாமலைக்கு சீட்டு கொடுக்கபடாமல் அவருக்கு பாஜக கல்தா கொடுத்திருக்கிறது.
பாஜக பட்டியல்
அதிமுக கூட்டணியில் முதல் ஆளாக 27 தொகுதிகளை கேட்டு வாங்கிய பாஜக, அந்தக் கூட்டணியில் கடைசி ஆளாக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. தொகுதிப் பங்கீட்டின்போதே பாஜகவுக்கு, அதிமுக வெற்றி வாய்ப்பு இல்லாத பெரும்பாலான தொகுதிகளை தள்ளிவிட்டதாக அண்ணாமலை உள்ளிட்ட சிலர் விமர்சனம் செய்தனர்.
ஆகவே அதிமுகவிடம் சில தொகுதிகளை மாற்றி வாங்கும் பணியில் பாஜக தீவிரமாக இருந்ததாகவும் தகவல்கள் பரவின. ஆனால், இவற்றை பற்றியெல்லாம் கவலைப்படாமல், தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு வேட்பாளர்களையும் அறிவித்து ஒரு வாரமாக பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி.
சில முக்கிய தலைவர்கள் ஒரே தொகுதியை குறிவைத்து கேட்டதும், வேட்பாளர் அறிவிப்பு தாமதமானதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
வேட்புமனு தாக்கல் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஒரு வழியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக.
கடந்த முறை நெல்லையில் வென்ற நயினார் நாகேந்திரன் இம்முறை சாத்தூரிலும், கடந்த முறை கோவை தெற்கில் வென்ற வானதி சீனிவாசன் இம்முறை கோவை வடக்கிலும் போட்டியிடுகின்றனர்.
(கடந்த முறை தெற்கில் வென்ற அம்மணி இம்முறை எதிரணியின் ஸ்டார் வேட்பாளருக்கு அந்த இடத்தை விட்டுக் கொடுத்துவிட்டு, அண்ணாமலை போட்டியிட்ட தொகுதிக்கு தாவியுள்ளார்)
பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக முயற்சி செய்த போதிலும், நாகர்கோவில் தொகுதி மீண்டும் எம்.ஆர்.காந்திக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
மொடக்குறிச்சியில் கடந்த முறை வென்ற சி.சரஸ்வதிக்கு பதிலாக அவரின் மருமகளான கிருத்திகா சிவக்குமாருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவிநாசி (தனி) தொகுதியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் களமிறங்குகிறார். மயிலாப்பூரில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும், மதுரை தெற்கில் ராம சீனிவாசனும், தஞ்சையில் கருப்பு முருகானந்தமும் போட்டியிடுகின்றனர்.
பல்வேறு புதுமுகங்களுக்கும் பாஜக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தொகுதியளவில் பரிச்சயமானவர்களுக்கே அதிகளவில் சீட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. 5 பெண்கள் இம்முறை பாஜக சார்பில் களம் காணுகின்றனர்.
காங்கிரஸில் இருந்து எல்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் 4 ஆண்டுகளாக பொறுப்பு ஏதும் வழங்கப்படாமல் இருந்த விஜயதரணிக்கு இம்முறை விளவங்கோட்டில் சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
பாஜக தனக்கு கிடைத்த 27 தொகுதிகளில், ஒரு தொகுதியை தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு கொடுத்துள்ளது.
அக்கட்சியின் தலைவர் திருமாறன், திருப்பத்தூரில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். அதே நேரத்தில், பாஜகவில் தங்களுக்கு ஓர் இடம் வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த புதிய நீதிக் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவில்லை.

அதே போல் அண்ணாமலைக்கு பாஜக வேட்பாளர் பட்டியலில் சீட்டு இல்லை.
கடந்த முறை அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலை, இம்முறை கோவையின் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதிகளை கேட்டுவந்தார். ஆனால், இம்முறை அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதனால் மொடக்குறிச்சியில் அண்ணாமலையை போட்டியிட சொல்லி தலைமை கேட்டுக்கொண்டது.
ஆனால், தனக்கு சாதகமான தொகுதி எதுவும் இல்லாததால் இம்முறை போட்டியிடுவதில்லை என்று அண்ணாமலை உறுதியாக மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
அண்ணாமலை தலைமையில் மூன்றாவது அணியமைத்து 2024 மக்களவைத் தேர்தலில் களம் கண்ட பாஜக, பல தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்தது. பாஜகவின் எழுச்சிக்கு காரணமாக அக்கட்சியின் இளைய தலைமுறையால் கொண்டாடப்பட்ட அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது, ஒரு தரப்பினருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது நிதர்சனமான உண்மை.
இதன் காரணமாக கொங்கு மண்டலத்தில் பாஜகவின் செல்வாக்குக்கு குந்தகம் ஏற்படலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்ணாமலை மட்டுமல்லாமல் பாஜகவில் பொன்.ராதாகிருஷ்ணன், குஷ்பு, அஸ்வத்தாமன், எஸ்.ஜி.சூர்யா, வினோஜ்.பி.செல்வம் போன்றோரும் இம்முறை தங்களுக்கு சீட் கிடைக்காத வருத்தத்தில் இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
வேட்பாளர் பட்டியல் குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, 'ஒரு தொண்டனாக பாஜகவின் வெற்றிக்கு உழைப்பேன். பூத் ஏஜெண்டாக இருந்துவிட்டு போகிறேன், தேசிய ஜனநாயக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றிபெற பாடுபடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.
என்ன பின்னே விரக்தி இருக்கத்தானே செய்யும்.
தமிழக பாஜக வேட்பாளர்கள் விவரம்:
- ஆவடி - ராஜசிம்ம மஹிந்திரா என்ற அஸ்வின் குமார்
- மயிலாப்பூர் - தமிழிசை சவுந்தர்ராஜன்
- தளி - நாகேஷ் குமார்
- திருவண்ணாமலை - ஏழுமலை
- ராசிபுரம் (தனி) - பிரேம்குமார்
- மொடக்குறிச்சி - கிருத்திகா சிவகுமார்
- உதகமண்டலம் - போஜராஜன்
- அவிநாசி (தனி) - எல்.முருகன்
- திருப்பூர் தெற்கு - தங்கராஜ்
- கோவை வடக்கு - வானதி சீனிவாசன்
கிஞிக்ஷிணிஸிஜிமிஷிணிவிணிழிஜி
- திருவாரூர் - கோவி. சந்துரு
- தஞ்சாவூர் - முருகானந்தம்
- கந்தர்வக்கோட்டை (தனி) - உதயகுமார்
- புதுக்கோட்டை - ராமச்சந்திரன்
- அறந்தாங்கி - கவிதா ஸ்ரீகாந்த்
- திருப்பத்தூர் - திருமாறன்
- மானாமதுரை (தனி) - பால கணபதி
- மதுரை தெற்கு - ராம ஸ்ரீநிவாசன்
- சாத்தூர் - நயினார் நாகேந்திரன்
- ராமநாதபுரம் - நாகேந்திரன்
- திருச்செந்தூர் - ராதாகிருஷ்ணன்
- வாசுதேவநல்லூர் (தனி) - ஆனந்தன் ஐயாசாமி
- ராதாபுரம் - பாலகிருஷ்ணன்
- நாகர்கோவில் - காந்தி
- குளச்சல் - சிவக்குமார்
- பத்மநாபபுரம் - ரமேஷ்
- விளவங்கோடு - விஜயதரணி
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் அகில இந்திய அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ளார். அதன்படி, பொன்னேரி (தனி) தொகுதியில் துரை சந்திரசேகர், வேளச்சேரியில் ஆசன் மவுலானா, ஸ்ரீபெரும்புதூரில் (தனி) செல்வப்பெருந்தகை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சோளிங்கரில் ஏ.எம். முனிரத்தினம், ஊத்தங்கரையில் (தனி) குப்புசாமி, கிருஷ்ணகிரியில் செல்ல குமார், பென்னாகரத்தில் ஜி.கே.எம். தமிழ் குமரன், ஆத்தூரில் (தனி) எஸ்.கே. அர்த்தனாரி, ஈரோடு(கிழக்கு) தொகுதியில் கோபிநாத் பழனியப்பன், உதகமண்டலத்தில் பி. ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கவுண்டம்பாளையத்தில் சூர்ய பிரகாஷ், சிங்காநல்லூரில் ஸ்ரீநிதி நாயுடு, துறையூரில் (தனி) விச்சு லெனின் பிரசாத், கடலூரில் சந்திரசேகரன், மைலாடுதுறையில் ஜமால் யூனுஸ் முகம்மது ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
அறந்தாங்கியில் டி. ராமச்சந்திரன், காரைக்குடியில் எஸ். மாங்குடி, உசிலம்பட்டியில் டி. சரவணகுமார், சிவகாசியில் கணேசன் அசோகன், திருவாடானையில் ராம கரு மாணிக்கம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் சங்கை கணேசன், அம்பாசமுத்திரத்தில் வி.பி. துரை, நாங்குநேரியில் ரூபி மனோகரன், கொளச்சல் தொகுதியில் தங்கை கத்பெர்ட், விளவங்கோடு தொகுதியில் டி.டி. பிரவீண், கிள்ளியூரில் ராஜேஷ் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

admin
