அதிமுக வில் எம்.எல்.ஏ சீட்டு கேட்டு சென்னை சென்றவர் திமுகவில் இணைந்து ஊர் திரும்பினார்!

அதிமுக வில் எம்.எல்.ஏ சீட்டு கேட்டு சென்னை சென்றவர் திமுகவில் இணைந்து ஊர் திரும்பினார்!

அ.கார்த்திஷ்வரன்,

  மதுரை கிழக்குத் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.தமிழரசன், தனக்கு 'சீட்' கிடைக்காத அதிருப்தியில் சொந்த ஊருக்கு¢ திரும்பாமலே திமுகவில் இணைந்துவிட்டார்.

   மதுரை கிழக்குத் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.தமிழரசன். இவர் மதுரை கிழக்கு மாவட்ட ஜெ. பேரவை செயலாளராகவும் இருந்தார். இவர், இந்த தேர்தலில் மேலூர் தொகுதியில் போட்டியிட 'சீட்' பெற முயற்சித்து வந்தார்.

   அதற்காக, இவர், கடந்த சில ஆண்டுகளாகவே சட்டப்பேரவை அதிமுக துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி. ராஜன்செல்லப்பா மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர்கள் மூலமாகவும் 'சீட்' பெற முயன்று வந்தார்.

   இருந்த போதும் அவருக்கு மேலூர் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்படாமல் தற்போது எம்எல்ஏ-வாக உள்ள பெரியபுள்ளானுக்கே மீண்டும் அதிமுக தலைமை 'சீட்' வழங்கியது.

  வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன் 'சீட்' பெறுவதற்காக கடந்த சில நாட்களாகவே சென்னையில் முகாமிட்டிருந்த தமிழரசன், தனக்கு 'சீட்' கிடைக்காததால் அதிர்ச்சி அட்ய்ந்தார்.

  அப்படியிருக்க அவர், சொந்த ஊருக்கு வராமல் சென்னையில் இருந்த திமுக அமைச்சரும், கிழக்குத் தொகுதி எம்எல்ஏ-வுமான பி.மூர்த்தியை சந்தித்து திமுகவில் சேர விருப்பம் தெரிவித்தார்.

   அமைச்சர் பி.மூர்த்தி, கட்சித் தலைமையிடம் பேசி உடனடியாக முதல்வர் முன்னி லையில் அவரை திமுகவில் இணைந்தார்.

அவருடன் அவரது தம்பி பொன்னுசாமியும் திமுகவில் சேர்ந்துள்ளார். கே.தமிழரசன், 1996-2006-ம் ஆண்டு வரை மேலூரில் பத்தினெட்டாங்குடி கிராம ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.

   2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் பி.மூர்த்தியை தோற்கடித்து எம்எல்ஏ ஆக தேர்வு செய்யப்பட்டார் என்பது சுட்டிக்காட்டப்படக்கூடியது ஆகும்.