அவதூறு பரப்பிய தொலைக்காட்சி மீது நஷ்ட ஈடு வழக்கு! தவெக வேட்பாளர் தடாலடி!
ஜி.கே.சேகரன்,
என்மீது அவதூறு பரப்பிய தொலைக்காட்சி மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர்வேன், தவெக வளர்வதை பொறுக்கமுடியாமல் தீயசக்தி அவதூறூ பரப்புகிறது-,எனக்கு சம்மன் வந்தது பொய், நான் சட்டத்தின் அடிப்படையில் இதனை எதிர்க்கொள்வேன், வாணியம்பாடியில், தவெக வேட்பாளர் சையத் புர்ஹானுதீன் பேட்டி.
திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடியில் உள்ள தமிழக வெற்றிக்கழக தேர்தல் அலுவலகத்தில் வாணியம்பாடி, சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர், சையத் புர்ஹானுதீன், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது பேசிய அவர், தனியார் தொலைக்காட்சியில், செய்தி வெளியாகியது, தவெக வேட்பாளர் 600 கோடி ஊழல் செய்ததால், அவர் கைது செய்யப்படுவார் என, அது தீயசக்தி, பரப்பும் அவதூறு.
என்னிடம் 600 கோடி ரூபாய் இருந்தால், தளபதியை வைத்து நான் ஜாலியாக படம் எடுப்பேன்.
என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டு, இல்லை, எல்லாம் சரி பார்த்து தான், என்னை தவெக தலைமை வேட்பாளராக அறிவித்தார்கள், அவதூறு பரபரப்பிய தொலைக்காட்சி மீது, மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்வேன்,
வந்த செய்தியை வைத்து பார்த்த போது, இது பாஜக, திமுகவும், சேர்ந்து தான் இப்படி செய்கிறார்கள்.
வாணியம்பாடியில் திமுகவிற்கு ஆதரவு இல்லை, இங்கு, அதிமுக, தவெக தான் போட்டி, அதனை பொறுக்க முடியாமல், திமுகவினர் அவதூறு பரபரப்புகிறார்கள்.
எனக்கு ஜி.எஸ்.டி ஊழல் தொடர்பாக எந்த ஒரு சம்மனும் வரவில்லை,தவெக இணைந்ததில் இருந்து, என் வீட்டிற்கு சோதனைக்கு வந்தார்கள், எங்கள் வீட்டில் எந்த ஆவணமும் இல்லை என கூறினார்கள்.
கூட்டு களவாணியாக சேர்ந்து, புது ஆள், தமிழகத்திற்கு வரகூடாது என செயல்படுகிறார்கள்,தீயசக்தி திமுகவை கண்டிக்கின்றேன்.
என் மீது பொய்யான குற்றச்சாட்டை முன் வைத்த தொலைக்காட்சி மீது 2 கோடி கேட்டு நஷ்ட ஈடு வழங்க வழக்கு தொடர்வேன்.
நேருவிடம், செந்தில் பாலாஜி, கே.சி.வீரமணி, எல்லார் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது,
மக்கள் எங்கள் பக்கம், இருப்பதால் பயந்து, தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்கள் மீது அவதூறு பரப்பி வருகிறார்கள்.
மக்கள் இதனை நம்ப வேண்டாம், நான் வழக்கறிஞர், 90% நான் ஏழைகளுக்காக, வேலை செய்தேன். எங்களிடம் காசு இல்லை, 6 ஆம் தேதி நான் இது தொடர்பாக ஆஜராகவில்லை, என்னுடைய வழக்கறிஞர் சென்று பார்ப்பா£.
என்.ஒ.சி உள்ளது, ஜூனைத் அஹமது என்னுடைய வழக்குரீதியானவர், அவருக்கு எனக்கும் உள்ள தொடர்பு, நல்ல நண்பன் மட்டுமே, அவர் சில தவறான செயல்களில் ஈடுப்படுகிறார் என தெரிந்ததும் இந்த விசியத்தில், நான் ஒதுங்கிவிட்டேன்.
அவருக்கும், அவருடைய நன்பருக்கும் இடையே தகராறு காரணமாக நான் அவர்களுடன், சேரவில்லை,இதற்கு முன் எனக்கு வந்தது சம்மன் இல்லைசட்டத்தின் அடிப்படையில் இதனை எதிர்க்கொள்வேன்.
நான் இஎம்ஐயில் கார் வாங்கியுள்ளேன்,கைக்கூலிகள், தமிழகவெற்றிக்கழகத்தை குறி வைக்கிறார்கள்,ஜி.எஸ்.டி ஊழல், நிறைய நடக்கிறது, இதுகுறித்து நானே நிறைய புகார் அளித்துள்ளேன், அதற்கு எவ்வித பதிலும் அளிக்கவில்லை எனக்கு சம்மன் வந்தது பொய் எனக் கூறினார்.

admin
