என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ சட்டங்களை எதிர்த்தது திமுக தான்! இஸ்லாமியர்கள் மறந்து விடக்கூடாது!அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!

ஜி.குலசேகரன்,

 என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ சட்டங்கள் கொண்டு வந்த போது அதனை முதலில் எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இஸ்லாமியர்கள் அதை மறந்துவிடக்கூடாது என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

   திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் க.தேவராஜி தலைமை வகித்தார். மாதனூர் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஜி.ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வடக்கு மண்டல பொறுப்பாளர் எ.வ.வேலு கலந்துகொண்டு ஆம்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அ.செ.வில்வநாதன் அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார்.

   அப்போது அவர் பேசியதாவது கடந்த 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தற்சமயம் நிறுத்தப்பட்டுள்ள திமுக வேட்பாளர் அ.செ.வில்வநாதன் ரூபாய் 1039 கோடி செலவில் துறை சார்ந்த பணிகள் செய்து முடித்துள்ளார்.

  அதனால் தான் திமுக தலைவர் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளார். ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 300 பூத்துகள் உள்ளது. அதனால் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.

  கடந்த 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நல திட்டங்களை வீடு வீடாக சென்று மக்களுக்கு நினைவுற்ற வேண்டும்.மத்திய அரசு என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ சட்டங்கள் கொண்டு வந்த போது அதனை முதலில் எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

  அந்த சட்டங்கள் இசுலாமியர்களுக்கு எதிரான சட்டம். அப்போது அந்த சட்டத்தை அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். அதனால் தான் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

  ஆனால் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனி எந்த தைரியத்தில் இசுலாமியர்களுக்கு ஆதரவாக இருப்பதாக பேசுகிறார். இசுலாமிய மக்களை நினைவு படுத்துகிறேன், நமக்காக உழைப்பவர்கள் யார். நமக்காக குரல் கொடுப்பவர்கள் யார்.நடக்கயிருக்கும் ஜனநாயக போரில் டில்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் தான் போட்டி.

  இதில் டில்லி தோற்கடிக்க வேண்டும். தமிழ்நாட்டு வெல்ல வேண்டும். தமிழ்நாடு வளர்சி அவர்களுக்கு பிடிக்கவில்லை. தமிழ்நாடு முதல் அமைச்சர் தான் நம்பர் 1 முதல் அமைச்சராக உள்ளார். டில்லி தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது.

  வரி பணத்தை நம்மிடம் வசூல் செய்து பாஜக ஆளும் மாநிலங்களுக்கு செலவு செய்து வருகிறது. ஆகையால் தமிழ்நாடு வெல்ல வேண்டும் என்றால் இந்த சட்டமன்ற தேர்தலில் 200கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்ற வேண்டும்.

  அதற்காக ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அ.செ.வில்வநாதனுக்கு  உதய சூர்யா சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 வாணியம்பாடி தொகுதி.

  வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் அறிமுகம் மற்றும் செயல்வீரர் கூட்டம். வடக்கு மண்டல பொறுப்பாளர் எ.வ.வேலு பங்கேற்றார்.

  கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வடக்கு மண்டல பொறுப்பாளர் எ.வ.வேலு கலந்துகொண்டு வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார்.

  அப்போது அவர் பேசியதாவது:- இந்த முறை வாணியம்பாடி சட்டமன்ற தேர்தலில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஏணி சின்னம் வெற்றி பெற வேண்டும். திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் ஏணி சின்னத்திற்கு வாக்கு கேட்டு வெற்றி பெற செய்ய வேண்டும்.

அதற்காக வீடு வீடாக சென்று 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் தமிழ்நாடு மக்களுக்கு ஏராளமான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதனை நினைவு படுத்தி வாக்கு சேர்க்க வேண்டும் என்று பேசினார்.