வடை சுடும் அதிமுக வேட்பாளர்!
ஜி.கே.சேகரன்,
நாட்றம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் ஹோட்டல் கடையில் வடை மற்றும் ஆம்லெட் போட்டு கொடுத்து வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் தும்பேரி, சங்கராபுரம், எக்லாஸ்புரம், வடக்குபட்டு, திம்மாம்பேட்டை புல்லூர் அலசந்தராபுரம் நாராயணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாட்றம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் சாம்ராஜ் தலைமையில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
அப்போது தும்பேரி பகுதியில் செயல்பட்டு வரும் ஹோட்டல் கடையில் அதிமுக வேட்பாளர் வடை மற்றும் ஆம்லெட் போட்டுக் கொடுத்து வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும் அதிமுகவின் தேர்தல் அறிக்கைகள் மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளாக எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தும் தொகுதி மக்களின் நலனுக்காக சொந்த செலவில் சாலை விரிவாக்க பணிகளையும் பல்வேறு திட்ட பணிகளில் செய்து கொடுத்துள்ளதாகவும் , ஆனால் திமுக ஆட்சியில் எந்த வித மக்கள் நலன் திட்டங்கள் இல்லை எனக் கூறி பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது கழக மருத்துவர் அணி மாநில இணை செயலாளர் டாக்டர் பசுபதி, (சீட்டு ஏமாற்றப்பட்டவர்) முன்னாள் அதிமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் கோபால் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.

admin
