தேர்தல் நடத்தை விதி மீறல்! அமைச்சர் காந்தி மீது வழக்கு!

தேர்தல் நடத்தை விதி மீறல்! அமைச்சர் காந்தி மீது வழக்கு!

கு.அசோக்,

 அரக்கோணத்தில் தேர்தல் நடத்தை விதி முறை மீறியதாக திமுக மாவட்ட செயலாளர் ( அமைச்சர்)  காந்தி , அவருடைய கார் டிரைவர் ஆகிய இருவர் மீது பிரிவுகளின் கீழ் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தனி சட்டமன்ற தொகுதியில் விசிக வேட்பாளராக எழில் கரோலின் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

   அப்போது திமுக மாவட்ட செயலாளர் ( அமைச்சர்)  காந்தி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கட்சி கொடியுடன் கூடிய காரில் வந்தார்.  இது தொடர்பாக அரக்கோணம் அதிமுக வேட்பாளர் ரவி தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு தர இருப்பதாக தெரிவித்தார்.

   இந்நிலையில் அரக்கோணம் டவுன் கிராம நிர்வாக அலுவலர் முருகன் டவுன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

   அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி வேட்பு மனு தாக்கல் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த போது  டி .என் .73 ஏகே 4455 பிஎம்டபிள்யூ என்ற எண் கொண்ட வெள்ளை நிற காரில் இராணிப்பேட்டை திமுக மாவட்ட செயலாளர் காந்தி மேற்படி வாகனத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வந்ததார்.

  அந்த வாகனத்தின் முன்பகுதியில் திமுக அரசியல் கட்சி கொடியை கட்டி வந்ததாகவும் அங்கிருந்த சிலர் சொன்ன பின்பு கொடியை கழற்றி விட்டதாகவும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாமல் தேர்தல் விதிமுறைக்கு மாறாக அரசியல் கட்சி கொடியுடன்  வாகனத்தில் வந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

 அதன்பேரில்  தேர்தல் வழக்காக கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.