துரைமுருகன் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை! பரபரப்பு ஏதும் ஏற்படவில்லை!

துரைமுருகன் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை! பரபரப்பு ஏதும் ஏற்படவில்லை!

கு அசோக்,

காட்பாடி அடுத்த பொண்ணை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற  துரைமுருகன் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்த தேர்தல் பறக்கும் அதிகாரிகளால் பரபரப்பு ஏதும் ஏற்படவில்லை.

   தமிழக சட்டமன்ற பொது தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தற்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

  இதனிடையே காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் மூன்று பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

   தற்போது தேர்தல் வேட்பாளர்கள் அறிவித்த நிலையில் காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொன்னை பகுதியில் உள்ள ஒட்டனேரி தனது முதல் கட்ட பிரச்சாரத்தை அமைச்சர் துரைமுருகன் துவக்கினார்.

 அதற்காக அவர்  காட்பாடியில் உள்ள இல்லத்திலிருந்து புறப்பட்டுசென்ற பொழுதுபொன்னை மேம்பாலம் பகுதியில்கணியம்பாடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் மற்றும் காவலர்கள் சிவக்குமார், ஹேமலதா ஆகியோர் துரைமுருகன் பயணித்த கார் மற்றும் பின் தொடர்ந்து வந்த இரண்டு காரில்  சோதனை மேற்கொண்டனர்.