சரியும் முக்குலத்தோர் வாக்கு! அதிமுக திணறல்!

   சரியும் முக்குலத்தோர் வாக்கு! அதிமுக திணறல்!

 ஆர்.பாலஜோதி,

தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் ஓட்டை குறிவைத்து சசிகலாவும் தேவேந்திரகுல வேளாளர் வாக்குகளை பெரும் நோக்கில் கிருஷ்ணசாமியும் களம் இறங்கி இருப்பதால் அதிமுக வேட்பாளர்கள் பதற்றத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

   சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இபிஎஸ் ஏற்காததால் கடுப்பாகிப்போன சசிகலா இபிஎஸ் -ன் தோல்விக்காக வேலை செய்ய தொடங்கி விட்டார்.

  மேலும் அவரது கட்சி போட்டியிடும் 21 தொகுதிகள் முக்குலத்தோர் வாக்குகள் அடர்த்தியாக இருக்கும் தொகுதிகளாகும். மேலும் சசிகலாவின் கட்சிக்கு எத்தனை ஓட்டு சதவீதம் போகிறதோ அத்தனை ஓட்டுகளும் அதிமுக ஓட்டுக்கள் தான் அது எடப்பாடிக்கு தான் பின்னடைவை ஏற்படுத்தும்.