துப்பாக்கி முனையில் நடுரோட்டில் களேபரம்!
ஜி.குலசேகரன்,
ஆந்திராவில் அப்பாவி தமிழர்களை சுட்டு கொன்றார்களே அதனால் தட்டி கேட்டேன்!. நடுரோட்டில் துப்பாக்கி முனையில் ஆந்திர போலீசார் வாலிபரை கைது செய்ததால் முன்னாள் ராணுவ வீரர் ஆதங்கம்.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், அனந்தபூர் அருகே கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி சின்னம்மா (45), அவரது மகன் சின்னா (30) ஆகியோர் ஆந்திர பகுதியில் ஏதோ ஒரு குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து திருப்பத்தூர் வழியாக சிங்காரபேட்டை செல்ல தாய் மற்றும் மகன் வந்துள்ளனர்.
இவர்களை தெலுங்கானா பதிவு எண் கொண்ட காரில் ஆந்திர போலீசார் பின் தொடர்ந்து சென்ற நிலையில் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து காரில் தூக்கி போட்டு சென்றுள்ளனர்.
பொது இடங்களில் வாலிபர் ஒருவரை ஆந்திர போலீசார் என்று கூறி கடத்தல் சம்பவம் போல செய்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காரில் கடத்த முயன்றவர்களை சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதனால் நாங்கள் போலீஸ் இவர்கள் போதை பொருள் கடத்தல் கும்பல் என்று கூறி அவரை கைது செய்கிறோம் என்று போலீசார் கூறி உள்ளனர். பொது வெளியில் அதிரடி கைது செய்ததால் பொதுமக்கள் பதற்றம் அடைந்து வீடியோ எடுத்துள்ளனர்.
அப்போது வீடியோ எடுக்க வேண்டாம் என்று மிரட்டியதால் பலருக்கு இவர்கள் போலிஸ் தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பின்னர் திருப்பத்தூர் நகர போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் போலிஸார் விசாரணை செய்து ஆந்திர போலீசாருடன் அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் வாலிபர் மற்றும் அவரது தாயை போலீசார் கைது செய்யும் போது அருகே இருந்து முன்னாள் ராணுவவீரர் தட்டி கேட்டுள்ளார்.
அவரையும் போலிஸார் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆதங்கம் தெரிவித்த அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் செம்மரம் வெட்ட வந்தவர்கள் என்று அப்பாவி தமிழ் மக்கள் 20 பேரை சுட்டு கொலை செய்தனர். உன் மண்ணில் நடந்தால் குற்றம், எங்கள் மண்ணில் நடந்தால் அது நியாயமா? என்று கேள்வி எழுப்பினேன் என்று ஆதங்கம் தெரிவித்தார்.

admin
