இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வேலூரிலிருந்து  6 மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்!

இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வேலூரிலிருந்து  6 மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்!

ஜி.குலசேகரன்,

  தேர்தலுக்காக சண்டிகர் மற்றும் உத்தரகாண்டிலிருந்து காட்பாடி ரயில் நிலையம் வந்தடைந்தது பாதுகாப்பு படை. குறிப்பாக 600 ஐ.டி.பி.பி(INDO TIBET BORDER POLICE ) வீரர்கள் இங்கிருந்து  6 மாவட்டங்களுக்கு விரைவு

  தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக சண்டிகர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து    இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 600 வீரர்கள் ரயில் மூலம் காட்பாடி ரயில் நிலையத்தை வந்தடைந்தனர்.

  இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கை மொத்தம் 600 வீரர்கள் (ஒரு கம்பெனிக்கு 85 பேர் வீதம் பிரிக்கப்பட்டுள்ளனர்).

  காட்பாடி ரயில் நிலையம் வந்தடைந்த இந்த வீரர்கள், அங்கிருந்து பேருந்துகள் மூலம் தேர்தல்பாதுகாப்புப்பணிக்காகவேலூர்,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை,திருவண்ணாமலை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டுஆகிய6 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

   தேர்தலின் போது பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யவும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் இந்த மத்தியப் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 ஒரு கம்பெனிக்கு 85 வீரர்கள் என்ற அடிப்படையில், அந்தந்த மாவட்டங்களில் இவர்கள் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வார்கள்.