மூன்று கோடி செலவில் எம் ஜி. ஆருக்கு கோவில்!

மூன்று கோடி செலவில் எம் ஜி. ஆருக்கு கோவில்!

கு.அசோக்,

 அதிமுகவை தோற்றுவித்த புரட்சித்தலைவர் எம்.ஜி.இராமசந்திரன் (எம்.ஜி.ஆர்.) அவர்களை அக்கட்சியினர் மறந்து வரும் நிலையில் அவருக்காக அவரது விசுவாசி ஒருவர் ஆலயம் அமைத்துள்ளார்.

காட்பாடி அருகேயுள்ள கரசமங்கலத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு ரூ3 கோடி செலவில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 வேலூர்மாவட்டம்,காட்பாடி அருகேயுள்ள கரசமங்கலம் கிராமங்கலம், ரகுபதி நகரில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு  கோவில் கட்டப்பட்டு அதன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 சுமார் 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இதில் இரண்டு நாட்கள் யாக சாலைகள் அமைத்து விக்னேஷ்வர பூஜை,வருண பகவான் பூஜை,வாஸ்து சாந்தி,கணபதிஹோமம் ,உள்ளிட்டவைகள் நடைபெற்றது.

 பின்னர் இரண்டாம் கால பூஜை நடைபெற்று பூர்னஹதி நடந்தது.

 மேளதாளங்கள் முழங்க கலசங்கள் மற்றும் எம்.ஜி.ஆர் சிலைக்கும்  மஹா கும்பாபிஷேகமானது நடைபெற்றது.

 சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பணிகள் நடந்து கட்டி முடிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆலய நிறுவனர் முரளி, சைதை துரைசாமி, சேகர் ரெட்டி என திரளான பொதுமக்கள்  பங்கேற்றனர்.