பறக்கும்படையில் பெண் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் குறட்டை விட்டு தூக்கம்!

ஜி.குலசேகரன்,

தூங்காதே தம்பி தூங்காதே, நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார் விழித்து கொண்டொரெல்லாம் பிழைத்து கொண்டா£ உன் போல் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார் என்பதை போல திருப்பத்தூர் தொகுதியில் பறக்கும்படையினர் குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் களத்தில் போட்டியிட தயாராக உள்ளனர்.

  தேர்தல் நேர்மையுடன் நடக்க வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா நடக்காமல் இருக்க 24 மணி நேரமும் வேட்பாளர்கள் மற்றும் பண பரிவர்த்தனையை அனைத்து தொகுதிகளிலும் கண்காணிக்க பறக்கும்படை அதிகாரிகளை நியமிக்கப்பட்டிருக்கிறது.

  அதில் 3 சுற்றுகளாக அதாவது 8 மணி நேரத்திற்கு ஒரு அதிகாரிகளை நியமனம் செய்து ரோந்து முறையில் சோதனை செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

   இந்த நிலையில் திருப்பத்தூர் சட்டமன்ற தொதிக்குட்பட்ட திருப்பத்தூர் - தர்மபுரி செல்லும் சாலையில் பறக்கும் படை அலுவலர் ஆதவன் தலைமையிலான குழுவினர் 8 மணி நேரம் கூட பணி செய்யாமல் வண்டியை ஓரம் கட்டி குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருந்தனர். அதில் பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் கவிதா, ஒரு தலைமை காவலர், கேமரா மேன் உட்பட அனைவரும் குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருந்தனர்.

  இந்த நிலையில் இதனை நோட்டமிட்ட செய்தியாளர் வீடியோ எடுத்துள்ளார். செல் போனில் பிளாஸ் லைட் அடிப்பது கூட தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். அப்போது அருகில் சென்று அதிகாரி ஆதவன் இருக்கும் பக்கத்தில் எவ்வளவு நேரம் தூங்கி கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டதும் அலறி அடித்து கொண்டு வீடியோ எடுப்பதை தடுக்க முயற்சி செய்தார்.

   பின்னர் அங்கிருந்து வண்டி எடுத்து கொண்டு சென்று விட்டனர். 8 மணி நேரம் கூட முழுவதுமாக பணி செய்யாமல் இப்படி தூங்கி கொண்டு இருந்தால் பண பட்டுவாடாவை எப்படி தடுக்க முடியும் என்று கேள்வி எழுந்துள்ளது.