பட்டாவுக்கு லஞ்சம்... ஆளும் கட்சியின் பெயரை கெடுக்கும் வருவாய் அதிகாரிகள்!குற்றம் சாட்டிய திமுக கவுன்சிலர்!

 ஜி.குலசேகரன்,

 வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 27ஆவது வார்டு பகுதியில் வ.உ.சி நகர், மலைமேடு, நேரு நகர் என உள்ளது. அந்த பகுதிகளில் வாழும் பொதுமக்களிடம் பட்டா தருவதற்காக வருவாய்த்துறையினர் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம்   முதல் 10 லட்சம் வரை லஞ்சம் கேட்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

 திமுக மாமன்ற உறுப்பினரே அதிகாரிகள் லஞ்சம் கேட்பதை இணைய வெளியிட்டதுடன் சுமார் ரூ.,50 கோடி வரையில் அதிகாரிகள் முறைகேடாக வசூலிக்க முயற்சி என கொதிப்பு.

 வேலூர்மாவட்டம்,வேலூர் மாநகராட்சியில் இரண்டாவது மண்டலத்திற்குட்பட்ட 27 ஆவது வார்டான நேரு நகர் வ.உ.சி நகர் மலைமேடு பகுதி சுமார் 2ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக இங்கேயே வசித்து வருகின்றனர்.

 தமிழக முதல்வர் அடுத்த மாதம் வேலூர் வரும் போது இவர்களுக்கு பட்டா வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 எனவே அதனை முறைப்படுத்துவதாகவும்  அதற்காக வருவாய்த்துறையினர் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் ரூ.10லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் வரையில் கேட்கிறார்களாம்.

 வீடுகளை அளவீடு செய்து கேட்பதாக 27 ஆவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் சதிஷ் பாச்சி குற்றம் சாட்டியிருக்கிறார்.

 இது அதிகாரிகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  முறைப்படுத்துவது என்று காரணம் காட்டுவதற்கு வீட்டில் ஏசி பிரிட்ஜ், டிவி, கார் இருக்க கூடாது என காரணங்களை காட்டுகின்றனர்.  அப்படி இருந்தால் பட்டா தரமாட்டோம் என 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களை அதிகாரிகள் மிரட்டுகின்றனர்.

   அதுவும் தமிழக முதல்வர் கையாலேயே பட்டா வழங்கபடவுள்ளது என கூறி அதிகாரிகள் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது திமுகவினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தகவல் கேட்க முயன்ற போது ஒருவர் மாறி ஒருவர் அவரிடம் பேசு இவரிடம் பேசு என அலைகழிக்கின்றனர்.

   திமுக கவுன்சிலர் ஒருவரே அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக வீடியோ வெளியிட்டு அதிரடித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  அப்படியிருக்க லஞ்சம் வாங்காமல் பட்டா கொடுத்தால் பெற்றுகொள்கிறோம் லஞ்சம் கேட்டால் பட்டாவே தேவையில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.