எய்ம்ஸ் மருத்துவமனையில் அத்வானி திடீர் அனுமதி!

நரேஷ். என்,
முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி நள்ளிரவில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாஜகவை முன்னெடுத்த தலைவர்களில் மிகவும் அறியப்பட்டவர் அத்வானி. அவருக்கு தற்போது வயது 96 ஆகிறது.
நேற்று நள்ளிரவு திடீரென அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறுநீரக பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.