ஆந்திர அரசியல் திகுதிகு! பெண்களை பிரச்சனைக்கு இழுத்தால் அராஜகம் வலுக்கும்!ஜூனியர் என்டிஆர் கருத்து!

ஆந்திர அரசியல் திகுதிகு! பெண்களை பிரச்சனைக்கு இழுத்தால் அராஜகம் வலுக்கும்!ஜூனியர் என்டிஆர் கருத்து!

  ஜி.எஸ்.மேத்யூராஜ்.

  அரசியலுக்காக பெண்களை

சந்திரபாபு நாயுடுவின் மனைவி மீதான தனிப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக ஜூனியர் என்டிஆர் காரசாரமாக பேசியிருக்கிறார்.

   நாயுடு மீதான தனிப்பட்ட தாக்குதல்களைக் கண்டிக்கும் வகையில் நடிகர் ஒரு ஒரு வீடியோவை வெளியிட்டார்.

 அதில் நாயுடுவின் மனைவி புவனேஸ்வரியை மையப்படுத்தி அரசியல் நடத்தவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

  ஆளும் ஒய்எஸ்ஆர்சிபியால் தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கண்ணிர் விட்டு அழுதார்.

 இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் என்று அழைக்கப்படும் நடிகர் நந்தமுரி தாரக ராமராவ் ட்விட்டரில் இதை பதிவிட்டுள்ளார்.

    அவர் வெளியிட்ட வீடியோவில், அரசியல் என்பது பொதுப் பிரச்சினைகளுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் தனிப்பட்ட விஷயங்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் கூறினார்.

 "நாம் எதைப் பற்றி பேசினாலும் அது நம் ஆளுமையை வரையறுக்கிறது. அரசியலில், விமர்சனங்கள் மற்றும் பதிலடிகள் மிகவும் பொதுவானவை, ஆனால் அவை அனைத்தும் பொதுப் பிரச்சினைகளுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும், தனிப்பட்டதாக இருக்கக்கூடாது.

   நேற்று, சட்டசபை சம்பவம் என்னைத் சங்கடப்படுத்திவிட்டது.. எப்பொழுதெல்லாம் பொதுப் பிரச்சனைகளை புறந்தள்ளுகிறோம், தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அடிபணிந்து, பெண்களை பிரச்சனைக்குள் இழுக்கிறோம், அது அராஜகத்திற்கு வழிவகுக்கிறது.

  அது தப்பு. பெண்களை மதிப்பது நமது கலாச்சாரம், அது நமக்குள் பொதிந்துள்ள ஒரு பாரம்பரியம். மேலும் இதுபோன்ற பாரம்பரியத்தை நமது வருங்கால சந்ததியினருக்கு கொண்டு செல்ல வேண்டும்" என்று ஜூனியர் என்டிஆர் கூறியுள்ளார்.

இந்த பிரச்சனையை வைத்தே நாயுடு அரசியல் அஸ்திரத்தை பலப்படுத்திக் கொள்வார் போலிருக்கே!