காட்டு மாடு வேட்டை! எட்டுபேர் கைது!!

காட்டு மாடு வேட்டை! எட்டுபேர் கைது!!

எம்.ஏ.கண்ணன்,

  காட்டு மாடை வேட்டையாடிய வழக்கில்  எட்டு இளைஞர்களை கைது செய்து வனத்துறையினர் சிறையில் அடைத்தனர்.

 தேனி மாவட்டம், தேவதானப்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட புலியோடை பகுதியில் காட்டு மாடு இறந்து கிடப்பதாக வனச்சரக அதிகாரிகளுக்கு வந்த தகவலின் அடிப்படையில் அவர்கள் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

  இந்த ஆய்வில் காட்டுமாடு வேட்டையாடப்பட்டு அதன் உடல் பாகங்கள் தனித்தனியே எடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

   இந்த நிலையில் காட்டு மாட்டை வேட்டையாடியதாக பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ், பிரபாகரன், வேல்முருகன்,

ஆண்டவர், சுரேஷ், சுந்தரம், ராஜபாண்டி, முகமது யூனிடஸ் ஆகிய எட்டு நபர்களை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுனர்.

  மேலும் இந்த  விசாரணைக்கு பின் வன உயிரின பாதுகாப்பு சட்டம்  1972ன் கீழ் வழக்கு பதிவு செய்து  பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் நிறுத்தினர்.

  காட்டு மாடு வேட்டையாடிய 8 நபர்களையும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார் பேரில் சிறையில் அடைத்தனர்.