சிறப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட ஐந்து போலீசார் காத்திருப்பில் வைக்கப்பட்டனர்!

சிறப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட ஐந்து போலீசார் காத்திருப்பில் வைக்கப்பட்டனர்!

க.பாலகுரு,

காவல் ஆய்வாளர், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட ஐந்து காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.."  தஞ்சை சரக டிஐஜி ஜியா உல் ஹக் அதிரடி நடவடிக்கை.

 திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நகர் பகுதியில் லாரிகளில் இருந்து டீசல் திருட்டில்  ஐந்து குற்றவாளிகளில் ஈடுபட்டுள்ளனர்.

  இதில் இரண்டு குற்றவாளிகளை மட்டும் கணக்கு காட்டி மீதமுள்ள மூன்று குற்றவாளிகளிடமும்  பணம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் ராஜ் மற்றும், திருவாரூர் உட்கோட்ட குற்ற தடுப்பு பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூபதி, அருள் மற்றும் காவலர்கள் ஜானி , மணிகண்டன்  ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு தஞ்சை சரக டிஐஜி ஜியா ஹக் மாற்றி ஆணையிட்டார்.

 மேலும் பணம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டில் தஞ்சை சரக டிஐஜி ஜியா உல் ஹக் உத்தரவின் பேரில் தஞ்சாவூரில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.