போதை மாத்திரை விற்றகும்பலை கைது செய்துள்ளோம்!வேலூர் எஸ்பி பேச்சு!

போதை மாத்திரை விற்றகும்பலை கைது செய்துள்ளோம்!வேலூர் எஸ்பி பேச்சு!

 கு.அசோக்,

  வேலூரில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழியை ஏற்றுகொண்டனர்- போதை மாத்திரைகள் விற்பனை தடுக்கும் வகையில் கண்காணித்து 3 ஆயிரம் போதை மாத்திரைகளை பறிமுதல் 18 பேர் போதை மாத்திரை விற்றகும்பலையும் கைது செய்துள்ளோம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில் வாகனம் பேச்சு

வேலூர்மாவட்டம்

வேலூர்மாவட்டம்,வேலூர் ஊரீசு கல்லூர் காப் அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் போதை பொருட்களுக்கு எதிராக பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்பதை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தமிழக அரசின்  சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொட நிகழ்ச்சி காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக  பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம் பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் போதை பொருட்களை யாராவது பயன்படுத்தினாலோ அல்லது விற்றாலோ அது குறித்த தகவலை அரசுக்கும் காவல்துறைக்கும் புகாராக தெரிவிப்பேன்.

   போதையால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் அவர்களின் மறுவாழ்வுக்கும் உதவுவேன் என உறுதிமொழி ஏற்றுகொண்டனர்.

  இதில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில் வாகனம் மாநகராட்சி மேயர் சுஜாதா துணை மேயர் சுனில்,குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு.மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு உள்ளிட்டோரும் திரளான பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகளும் விழாவில் பங்கேற்றனர்

   இவ்விழாவில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில் வாகனம் பேசுகையில் போதையை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் வேலூர் மாவட்டத்தை போதை மாத்திரைகளை விற்ற 18 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 ஆயிரம் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளோம் ஒரு போதை மாத்திரை ரூ.500 விற்கின்றனர் இந்த போதைகளை தடுக்க மாணவ,மாணவிகள் நீங்கள் போர் வீரர்களை போல் போதைக்கு எதிராக செயலாற்ற வேண்டும் என பேசினார்.

  ஆற்காடு,

 ஆற்காட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போதை பொருட்களுக்கு எதிராக பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் உறுதி மொழியை ஏற்றனர்.

  இராணிப்பேட்டைமாவட்டம்,ஆற்காட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தலைமையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது,

  தமிழக துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் போதைக்கு எதிராக உறுதிமொழியை காணொளி காட்சியில் துவங்கி வைத்ததை அடுத்து ஆற்காட்டில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் பங்கேற்று போதைக்கு எதிராக உறுதிமொழியை ஏற்றனர், போதைக்கு எதிராக பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது  இவ்விழாவில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டியில் உலக போதை பொருள் பயன்பாடு தடுப்பு மற்றும் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.

   திரும்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட காசிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் உலக போதை பொருள் பயன்பாடு தடுப்பு மற்றும் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

 அதில் போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளிதலைமை ஆசிரியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் சிறப்பு அழைப்பாளராக வட்டாட்சியர் நவநீதம் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 இந்த விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டு கசிநாயக்கன்பட்டி பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.விழிப்புணர்வு ஊர்வலத்தில் 600க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.