திருப்பத்தூரில் ஆர்பரிக்கும் நீர்வீழ்ச்சி! குளிக்க தடை!
ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் அருகே தொடர் கனமழை காரணமாக சுற்றுலாத்தலமான ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்து ஓடுவதால் நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்க தடைவிதித்த வனத்துறையினர் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி மலை அடிவாரத்தில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது.
இங்கு பிரசித்திபெற்ற வெற்றிவேல் முருகன் ஆலயம் உள்ளது. சுற்றுலாத்தலமான இந்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிமாவட்டங்களிலிருந்து மற்றும் உள்ளூர் வாசிகள் என தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு முருகன் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். மேலும் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் சுற்றுலா பயணிகளுக்காக உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் இங்கு நாளுக்குநாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஐந்து தினங்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. நீர்வீழ்ச்சியில் இருந்து ஓடும் நீர் சுற்றியுள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்புவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.
மேலும் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் தொடர் கன மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் அந்தப் பாதையில் தொடர்ந்து நடந்து வந்தால் அபாயகரமான சூழல் நிலவ வாய்ப்புள்ளது
இதனால் அங்கு வரக்கூடிய பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்

admin
