உதயநிதி? அமைச்சராகிறாரா?

ம.பா.கெஜராஜ்,
தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், புதிய அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் சொல்கின்றன. இந்த தகவலை ஆமோதிக்கும் விதமாக, உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுப்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள், நிர்வாக திறன் இல்லாமல் செயல்பட்டு வருபவர்கள், கட்சியின் உட்கட்சி பூசலுக்கு காரணமாக இருப்பவர்கள் என்று லிஸ்ட் போட்டு அமைச்சர்கள் குறித்த அறிக்கை முதல்வரின் பார்வைக்கு தொடர்நது போய் கொண்டிருக்கிறதாம்.
இதன் தொடர்ச்சியாக, தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என்றொரு தகவல் கோட்டை வட்டாரத்தில் கடந்த சில மாதங்களே உலவி கொண்டிருக்கிறது.
நிர்வாக ரீதியாக திறன்பட செயல்படாத சில அமைச்சர்களின் இலாகா மாற்றப்படலாம் எனவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அப்படி மட்டும் நடந்தால், அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது. அவருடன் திமுகவில் உள்ள பெண் எம்எல்ஏக்கள் மற்றும் இளைஞர்கள் சிவருக்கும் அமைச்சர் பதவி கொடுத்து புதுரத்தத்தை பாய்ச்சவும் முதல்வர் முடிவு செய்துள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலை உறுதிபடுத்தும் விதமாக, உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவது குறித்து முதல்வர் முடிவடுப்பார் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அதே போல் தான் உதயநிதியின் நெருங்கிய நண்பரும், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பொறுப்புக்கு வர வேண்டும் என்று அவ்வபோது கூறி வருகிறார்.
இதே கருத்தை ஆமோதிக்கும் விதமாக அமைச்சர் சிவசங்கரன் உள்ளிட்டோரும் உதயநிதியின் அமைச்சர் பதவி குறித்து பொதுவெளியில் அவ்வபோது பேசி வருகின்றனர்.