போராடியதற்காக நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

போராடியதற்காக நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

ஜி.கே.சேகரன்,

 திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் பணி வரன் முறை கேட்டு  போராட்டம் நடத்தியவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 வேலூர்மாவட்டம்,சேர்க்காட்டில் தமிழக அரசின் திருவள்ளூவர் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. அதன் கீழ் வேலூ£  இராணிப்பேட்டை,திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இதன் கட்டுபாட்டில் இயங்குகிறது.

   இதில் பணி வரன் முறை படுத்த கோரி இப்பல்கலைக்கழக தொழிலாளர்கள் 2013 ஆம்  ஆண்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் அவர்களை பணி வரன் முறைப்படுத்தாமல் 66 தொழிலாளர்களை சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்தது. இந்த பணி நீக்கத்தை எதிர்த்து பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கம் வேலூர்  முதன்மை தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

 அதில் அவர்களை பணி நிரந்தரம் செய்யவும், பணியில் அமர்த்தவும் உத்தரவிட்டது.

  இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச்,  நீக்கப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்தவும் பணி நிரந்தரம் செய்யவும் உத்தரவிட்டது.

   இதனால் 66 தொழிலாளர்கள் அவர்களின் குடும்பங்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.