பேய் பிசாசின் திட்டத்தை சாமியார் முறியடித்தாராம்!
ஜி.கே.சேகரன்,
சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மரக்கிளை முறிந்து விழுந்து பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம், பேய் பிசாசின் செயல் என்று சொன்ன சாமியார், அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய பயணிகள்.
பருகூரிலிருந்து 18-ஏ கொண்ட அரசு பேருந்து திருப்பத்தூர் வரை இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பேருந்தில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் ஆண்கள்,பெண்கள் என அனைவரும் இந்த பேருந்தில் பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை பருகூர் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நாட்றம்பள்ளி, தொட்டிகிணறு புதுப்பேட்டை வழியாக திருப்பத்தூர் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது பேருந்து சி.கே. ஆசிரமம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையில் இருந்த வேப்பமரம் கிளை முறிந்து பேருந்தின் மீது விழுந்ததில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுனர் உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் ஓட்டுநர், நடத்துனர் என அனைவரும் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசயமாக உயிர்த்தபினர்.
சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மரக்கிளை முறிந்து விழுந்து பேருந்து கண்ணாடி உடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது அங்கு வந்த சாமியார் ஒருவர் இந்த வேப்பமரத்தில் பேய் பிசாசுகள் உள்ளது. மனிதர்களை காவு வாங்குவதற்காகவே மரக்கிளை விழுந்தது.
ஆனால் நான் ஆத்தா அருளினால் நான் தான் காப்பாற்றினேன் என்று பீலா விட்டார். அதை கேட்ட சக பயணிகள் யோவ் பயித்தியம் போயா அந்தப்பக்கம் இது மழைகாலம் மரம் விழுந்துவிட்டது என்று அவரை அங்கிருந்து விரட்டினர்.

admin
