சிறுபான்மையினர் பகுதிகளில் போதை பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது!  ஆணைய தலைவரிடம் புகார்!

சிறுபான்மையினர் பகுதிகளில் போதை பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது!  ஆணைய தலைவரிடம் புகார்!

ஜி.கே.சேகரன்,

   வேலூர் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற  கலந்தாய்வு கூட்டத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர்அருட்தந்தை சொ. ஜோ. அருண், சே.ச. அவர்கள் சிறுபான்மையின மக்களின்கோரிக்கைகளை கேட்டறிந்து, 60 பயனாளிகளுக்கு ரூ.8.16 இலட்சம் மதிப்பிலானநலத்திட்ட உதவிகளை வழங்கினார்  - போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் சிறுபான்மை ஆணைய தலைவர் அருண் சே ச பேட்டி - இஸ்லாமிய மக்கள் வக்புவாரிய சொத்துகளை மீட்க வேண்டுமெனவும் வஃக்பு சொத்து முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டுமெனவும், சிறுபான்மையினர் இருக்கும் பகுதிகளில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

 வேலூர்மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருட்தந்தை சொ. ஜோ.அருண், சே.ச.  தலைமையில்  சிறுபான்மையினர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

   இந்த ஆய்வுக் கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தை சார்ந்த சிறுபான்மையினமக்களான முஸ்லிம்கள், கிறித்துவர்கள், பௌத்தர்கள் மற்றும் சமணர்கள் என சுமார்500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்தனர்.

  மேலும், கோரிக்கைகளை மனுக்களாகவும் அவரிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அவர்கள் மாவட்டஆட்சித்தலைவர் அவர்களிடமும், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களிடமும் அதுகுறித்த விவரங்களை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கக்கூடிய இரண்டு இனங்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதற்கான ஆணைகளை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கினார்.

  மீதமுள்ள மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கஅறிவுறுத்தினார். முன்னதாக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் கிறிஸ்துவ மகளி£ ¢உதவும் சங்கத்தின் மூலம் 11 பயனாளிகளுக்கு ரூ.1,10,000/- உதவித்தொகையும், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின்மூலம் 40 பயனாளிகளுக்கு ரூ.6,00,000/- உதவித்தொகையும்,கிறிஸ்துவ தேவலாயங்களில் பணிபுரியும் 6 உபதேசியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளையும், 2 உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்குநலவாரிய அடையாள அட்டைகளையும் என மொத்தம் 59 பயனாளிகளுக்கு ரூ.7,10,000/-மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.1,06,000/-மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியினையும் வழங்கினார். இக்கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி,சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில் வாகனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

  பின்னர் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருட்தந்தை சொ. ஜோ.அருண், சே.ச செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகுதமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படியும், மாண்புமிகுசிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்களின் வழிக்காட்டுதலின்படியும்,தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் இதுவரை 34மாவட்டங்களில் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

 35 வது மாவட்டமாக வேலூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுவரைமேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 939 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

 இதில் 271 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மற்றும் தீர்வுகாண முடியாத மனுக்களின்மீது அறிக்கையாக அரசிற்கு அனுப்பப்பட்டு அதன்மீதுகொள்கை முடிவுகள் எடுக்க ஆணையத்தின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

   இன்று நடைபெற்ற இந்த கள ஆய்வில் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள்,முஸ்லிம்கள், சமணர்கள் மற்றும் பௌத்தர்கள் ஆகிய பொதுமக்களுடன் நேரடியாககலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

  பெரும்பாலான மாவட்டங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளானது கல்லறை தோட்டம்,கபர்ஸ்தான் ஆகியவற்றிற்கு இடங்கள் கேட்டு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும்கல்லறை தோட்டம், கபர்ஸ்தான் போன்ற இடங்களில் சுற்றுச்சுவர் அமைத்தல்,ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பாதை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற பல்வேறுகோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

  மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்பணியிடங்கள் நிரப்புவதில் தாமதம் இருப்பதாகவும், வக்ஃபு வாரிய நிலங்கள்ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கு தீர்வு காணவும் மனுக்கள்வழங்கப்பட்டுள்ளது.

  இதன்மீது சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலரிடம் உடனடியாகஎடுத்து கூறப்பட்டு முடிந்தவரை அவற்றிற்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. தீர்வுகாண இயலாத இனங்களின்மீது முடிவெடுக்க அரசுக்கும் வக்ஃபு வாரியத்திற்குபரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

  நடைபெற்ற இந்தகூட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புத்தகங்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மாவட்டமுதன்மை கல்வி அலுவலர்களிடம் இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு இன்றுமாலையே இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு நாளைக்குள் இதன்மீது தீர்வுகாணப்படுவதாக உறுதி அளித்துள்ளார்.

 சிறுபான்மையினர் இருக்கும் பகுதிகளில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், இது குறித்துவிழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் சிறுபான்மையினரின் வாயிலாக இங்கே கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும், மாவட்டகாவல் கண்காணிப்பாளர் அவர்களும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

  மேலும் இப்பகுதிகளில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களின்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்களுக்கு போதைப் பொருள்களினால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறுவிழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.

  கிறிஸ்தவ தேவாலயங்கள் அமைப்பதற்கு தடையின்மை சான்று ஒரு சில இனங்களின் மீது நிலுவையில் இருப்பதாக தெரிவித்தனர்.

  அதன்மீது மாவட்டசிறுபான்மையினர் நல அலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

  பௌத்த மதத்தினர் தாங்கள் புத்தரைவணங்குவதற்காக புத்த விகார் அமைக்க அரசின் சார்பில் இடம் ஒதுக்கி தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.

 இதற்கான தகுந்த இடத்தை ஆய்வு செய்து வழங்கநடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

   மாவட்டத்திலுள்ள குறிப்பாக வேலூரில் உள்ள சமணர்கள் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடுகாடுபகுதியை பண்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

  கூட்டத்தில் கலந்து கொண்ட வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அந்த இடத்தை மேம்படுத்துவதற்காக ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 40 இலட்சம் ரூபாய் ஒதுக்கி அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

  சிறுபான்மையினர் பள்ளிகளில் குறிப்பாக உருது ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்தனர். அரசு அனுமதி அளித்துள்ள எண்ணிக்கையில் சிறுபான்மையினர்பள்ளிகளில் உருது ஆசிரியர்களை நியமிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலமாகநடவடிக்கை எடுக்க ஆணையம் அறிவுறுத்தியுள்ளது என தமிழ்நாடு மாநிலசிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருட்தந்தை சொ. ஜோ. அருண், சே.ச. தெரிவித்தார்

   பின்னர் இக்கூட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமிய சிறுபான்மை மக்கள் முகமது ரபீக் என்பவர் கூறுகையில் மத்திய அரசின் வஃக்பு வாரிய சட்டத்திருத்தம் மூலம் நலவாரியம் அமைக்காததால் தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் மேலும் வஃக்பு வாரிய சொத்துக்களை மீட்க ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்க அறிஞர்கள் ஜமாத் உறுப்பினர்கள் தலைவர்கள் கல்வியாளர்களை கொண்டு குழு அமைத்து வஃக்பு வாரிய சொத்துகளை மீட்க வேண்டும் மேலும் வஃக்பு போர்டு சொத்துகளில் ஊழல் முறைகேடு நடந்துள்ளதால் அதனை போக்கவும் சொத்துகளை மீட்கவும் சிபி.ஐ கொண்டு விசாரணை நடத்தபட வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.