மணிப்பூர் மக்கள் பாதுகாப்புக்கு 5000 வீரர்களை அனுப்பும் மத்திய அரசு!

மணிப்பூர் மக்கள் பாதுகாப்புக்கு 5000 வீரர்களை அனுப்பும் மத்திய அரசு!

 ம.பா.கெஜராஜ்,

மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட 5000 வீரர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத் தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் வன்முறை வெடித்தது. இதில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஒரு கும்பல் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அதவுபா (20) என்ற போராட்டக்காரர் உயிரிழந்தார். "அவரை சுட்டது யார் என்பது இது வரை தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், கண்ணால் கண்ட சாட்சியின் வாக்குமூலம் அடிப்படையில் இளைஞரின் உடம்பில் பாய்ந்த குண்டு, பாதுகாப்பு படையினரிடம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

   இதுகுறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது" என்று காவல் துறை அதிகாரிகள் கூறினர்.  பதற்றமான சூழல் நிலவுவதால், மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    பதற்றமான சூழல் நிலவுவதால், மாநிலத்தில் பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் போலியான செய்திகள் பரவி அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், பல மாவட் டங் களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

   மணிப்பூரில் பிரேன் சிங் தலைமை யிலான பாஜக அரசு, அமைதியைநிலை நாட்டவும், பிரச்சினை களுக்கு தீர்வு காணவும் தவறிவிட்டதாக கூறி தேசிய மக்கள் கட்சி (என்பிபி), பாஜகவுக்கு அளித்துவந்த ஆதரவை கடந்த 17-ம் தேதி வாபஸ் பெறுவதாக அறிவித்தது சுட்டிக்காட்டப்படத் தக்கது ஆகும்.

 இப்படி அங்கு மீண்டும் வன்முறை நடப்பதால் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது மணிப்பூருக்கு கூடுதல் படையினரை அனுப்பவும், அங்கு விரைவில் முழு அமைதியை ஏற்படுத்த கவனம் செலுத்துமாறும் அமித்ஷா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அந்த வகையில், மணிப்பூர் மக்களை வன்முறையில் இருந்து பாதுகாத்து, அமைதியை நிலை நாட்டும் வகையில் கூடுதலாக 5,000 வீரர் கள் அடங்கியதுணைராணுவப்படையை அனுப்ப மத்திய உள்துறை அமைச் சகம் முடிவு செய்துள்ளது.

 மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎப்) இருந்து 35 யூனிட், எல்லை பாதுகாப்பு படை படையில் (பிஎஸ்எப்) இருந்து 15 யூனிட் என மொத்தம் 50 கம்பெனி துணை ராணுவப் படையினர் விரைவில் மணிப்பூர் அனுப்பப்படுகின்றனர்.