அபூர்வ பொருட்கள் பிசினஸ் வேலூரில் சக்கை போடு போடுகிறது!

அபூர்வ பொருட்கள் பிசினஸ் வேலூரில் சக்கை போடு போடுகிறது!

 ஜி.கே.சேகரன்,

 அபூர்வ பொருட்கள் மற்றும் யானை தந்தம், திமிங்கல எச்சம் என்று பல்வேறு பிசினஸ்களில் வேலூரில் சில ஈடுபட்டுவருகிறார்கள்.

 அந்த வகையில்,  வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த அரியூர் மலைக்கோடி பகுதியில் யானைத்தந்தம் விற்பனை செய்வதாக ஒரு கும்பல்  பதுங்கி இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  அதன் அடிப்படையில் வனத்துறையினர் நடத்திய சோதனையில் பாஜக வேலூர்  நிர்வாகி சரத்குமார் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

   மேலும் சம்பவங்களில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   இந்த யானை தந்தம் கடத்தல் விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது இதில் மேலும் சிக்குவார்கள் என கூறபடுகிறது.

  இந்த வகையான பிசினஸில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த பலர் ஈடுபட்டுவருவதாகவும், ஒன் பை டீ குடித்தவன் எல்லாம் இன்றைக்கு இன்னோவா காரில் வலம் வருவதாகவும் கூறப்படுகிறது.