ஸ்பாட் சான்றிதழ் வழங்கிய கலெக்டர்!

ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகேயுள்ள மலை கிராமமான நாயக்கனேரி மலை கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மருத்துவ காப்பீடு அட்டை ஆதார் அட்டை ஆகியவைகள் மலையிலேயே வழங்க நடவடிக்கைரெடுத்தார், பள்ளியையும் பார்வையிட்டார்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் நாயக்கனேரி மலைவாழ் கிராமத்தில் விளிம்பு நிலை மக்களுக்காக நடைபெறுகின்ற சிறப்பு கணக்கெடுப்பு முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை மற்றும் ஆதார் அட்டை எடுக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் .பாஸ்கர பாண்டியன் அவர்கள் பார்வையிட்டார்.
உடன் வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, வட்டாட்சியர் மகாலட்சுமி, துணை வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பலர் உள்ளனர்.