சோளிங்கர் குடிநீருக்காக ரூ.47 கோடியே 48 லட்சத்தில் திட்டம் துவக்கம்!அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு!
கு.அசோக்,
சோளிங்கரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 47 கோடியே 48 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் பணியில் மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார் அதற்கான பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மகாபலிபுரம் பகுதியில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். இந்நிலையில் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட ஒன்று முதல் 27 வாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக 47 கோடியே 48 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள காணொளி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டு துவக்கி வைத்தார்.
இந்த நிலையில் கைத்தறி மற்றும் துணிநூல் ஆர். காந்தி நகராட்சி அலுவலகத்தில் இப்ப பணிகளை துவக்கி வைத்தார். இதில் சோளிங்கர் நகர மன்ற தலைவர் தமிழ் செல்வி அசோகன், ஆணையாளர் கன்னியப்பன் பொறியாளர் ஆசிர்வாதம் மற்றும் திமுகவின் முக்கிய முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

admin
