தாய்லாந்து அழகிகளின் ஆபாச நடனம்! பேர்னாம்பட்டு ஜிஎஸ்டி மோசடி பேர்வழிகளின் சுகவாசம்!
ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான பேர்ணாம்பட்டில்ம் ஒரு கும்பல் இன்றைக்கு ஜிஎஸ்டியின் பெயரால் பல நூறு கோடி ரூபாய்களை மோசடியாக சம்பாதித்து வருகின்றது.
விமான உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல பெரிய தொழிற்சாலைகள் பேர்னாம்பட்டில் இருப்பதாக ஜிஎஸ்டி கணக்கு காட்டி அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திவருகிறார்கள்.
பேர்னாம்பட்டு நகரைச் சேர்ந்த பல பேர் வழிகள் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு போன்ற இடங்களில் ஊடுருவி இப்படிப்பட்ட ஜிஎஸ்டி மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறிப்பாக பெரிய அளவிலான பிசினஸை செய்யும் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி-யை செலுத்தாமல் தவிர்ப்பதற்காக பல நூதன மோசடிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆடு மாடு மேய்பவர்களிடமும், பீடி சுற்றுவருபர்கள் மற்றும் கூலி தொழிலாளிகளிடம் ஆதார் அட்டை, பேன் அட்டைகளை வாங்கிக்கொண்டு அவர்களின் பெயரால் போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் ஜிஎஸ்டி விலக்கு சலுகைகளை பெற்று பெரிய பெரிய பிசினஸ் செய்பவர்களுக்கு உதவி செய்கின்றனர்.
அதன் விளைவு அரசுக்கு பலநூறு கோடி வருமான இழப்பு செயற்கையாக ஏற்படுகிறது.
திருப்பத்தூர் மற்றும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல்வேறு ஏழை அப்பாவிகளின் வீடுகளுக்கு கோடிக்கணக்கான ரூபாயை வரி செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி அலுவலகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இதனால் ஏழை அப்பாவிகள் செய்வதறியாது திணறி வருகிறார்கள்.
தினசரி வாழ்க்கையை தினறிக்கொண்டு நடத்தும் அப்பாவிகளின் ஆதார் அட்டையை 500 அல்லது 1000 ரூபாய் கொடுத்து பெற்றுக் கொண்ட பலர் இன்று ஜிஎஸ்டி மோசடியால் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
இது தொடர்பாக பல மாவட்ட எஸ்பிக்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்திருக்கிறார்கள்.
எத்தனையோ சாதனைகளை செய்து வரும் இளைஞர்கள் மத்தியில் மோசடியாக கோடிகளை ஈட்டும் இளைஞர்கள் இன்றைக்கு பேர்னாம்பட்டில் பெருகிவருகிறார்கள். அவர்களில் பலர் லட்சம் மற்றும் கோடிகளில் புரளுகின்றனர். எல்லாம் இந்த ஜிஎஸ்டி புண்ணியம் தான்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளில் ஒருவர் 25 வீடுகளை வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறார். உள்ளூர் மட்டுமின்றி பெங்களூருவிலும் அசையா சொத்துக்கள் உள்ளன. பல சொகுசு கார்கள் அவரிடம் உள்ளன.

அவரைப் பற்றி அவரிடம் பணி புரிபவர்களே வெளி உலகுக்கு வந்து பல தகவல்களை சொன்ன நிலையில் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அவர் மட்டுமின்றி பேர்னாம்பட்டில் அவரைப் போலவே பல்வேறு நபர்கள் இன்றைக்கு இந்த ஜிஎஸ்டி மோசடி தொழில் செய்து கோடிகளில் புரண்டு கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு சில அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக கூறப்படுவதால் நடவடிக்கை ஏதும் இன்றி அவர்கள் மோசடி தொழிலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அதேசமயம், அவர்களால் பாதிக்கப்பட்ட ஏழைகள் நடுத்தெருவில் நின்று கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஆகவே இதுகுறித்து நாட்டின் நிதி அமைச்சர் அவர்களுக்கு விரிவான புகாரை அளிக்கவும், ஜிஎஸ்டி கவுன்சிலின் பார்வைக்கும் இந்த மோசடி விவகாரத்தை கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட ஜிஎஸ்டி பெயரால் கோடிகளில் புரளும் தொழிலதிபர்கள் அவ்வப்போது தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து அழுகிகளை அழைத்து வந்து பேர்ணாம்பட்டு மற்றும் அவர்களுக்கு இஷ்டமான பகுதிகளில் ஆபாச நடனம் ஆட வைத்து குதுகளித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
அந்த வகையில் மீண்டும் தாய்லாந்து அழகிகளின் நடனம் நடத்த ஜிஎஸ்டி மோசடி மன்னர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
இம்முறை இந்த ஆபாச நடன விருந்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிலர் பங்கேற்கப் போவதாகவும் தகவல் இருப்பதால் மத்திய உளவுத்துறை இதுகுறித்து விசாரித்தால் பல விஷயம் புலப்படும் என்கிறார்கள்.

admin
