அரசு ஊழியர்கள் மிரட்டப்பட்டால் அதனை எதிர்த்து குரல் கொடுப்போம்!

அரசு ஊழியர்கள் மிரட்டப்பட்டால் அதனை எதிர்த்து குரல் கொடுப்போம்!

ஜி.கே.சேகரன்,

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தும் மாநில தலைவர் பாஸ்கரன் காட்பாடியில் பேட்டி.

   வேலூர்மாவட்டம்,காட்பாடியில் மருந்தாளுநர்கள் மாநில பேரவை கூட்டத்தில் கலந்துகொண்ட அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் பாஸ்கரன்செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜுலை 9 ஆம் தேதி நடக்கும் ஒரு நாள் அகில இந்திய அளவிலான வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கமும் கலந்துகொள்ளும்.

  இந்த வேலை நிறுத்தமானது அகில இந்திய அளவில் முடிவு எடுக்கப்பட்ட ஒரு வேலை நிறுத்தமாகும்.

 இந்த வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பிலும் கலந்துகொள்வது என சமீபத்தில் நடந்து முடிந்த ஜாக்டோ கியோ கூட்டத்திலும் முடிவு எடுக்கப்பட்டது. அந்த அடிப்படையில் மாநிலம் முழுவதும் இருக்கிற அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கலந்துகொள்வது என தீரமாணிக்கப்பட்டது.

  காலிப்பணியிடங்கள் அரசு துறையில் பல உள்ளது வேலை வாய்ப்பின்மை பொருளதாரத்தை முன்னுக்கு தள்ளும் கடந்த 10 மாதங்களாக வேலை வாய்ப்பு சதவிகிதம் ஏற்படுத்தியுள்ளது.

  அதே போன்று ஏ.ஐ தொழில்நுட்பத்தால் பலர் வேலை இழப்பார்கள் மத்திய அரசு வெளியிட்ட ஆய்வறிக்க சுட்டிகாட்டியுள்ளது.

  தமிழகத்திலும் அனைத்துறைகளிலும் சிறப்பு காலமுறை ஊதியம் மதிப்பூதியம் தொகுப்பூதிய என ஊழியர்களின் உழைப்பை சுரண்டுகிறது.

  மத்திய மாநில அரசுகள் முறையான காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அரசு அமுல்படுத்த வேண்டும்.

  எட்டாவது ஊதிய குழு அறிவிக்கப்பட்டும் பணிகள் துவங்கவில்லை அதனை உடனடியாக விரைவுப்படுத்த வேண்டும் என இந்த சூழலில்  இந்த வேலை நிறுத்தம் என்பது மத்திய மாநில அரசுகளுக்கு ஒரு  எச்சரிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமையும்.

  இந்தியா முழுவதும் இந்த வேலை நிறுத்தம் மிகச்சிறப்பாக நடைபெற இருக்கிறது. கடந்த தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர் ஆசிரியர் கோரிக்கை வெளியிட்டது திமுக மட்டுமே. அந்த வகையில் ஜாக்டோ ஜியோ கூடி ஏற்கனவே திட்டமிட்டிருந்த போராட்டங்களை ஒத்திவைத்துள்ளோம்.

  சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு ஊழியர்களுக்காக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் வரவேற்கதக்கது.

 நாங்கள் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம் அரசுக்கு கால அவகாசம் கொடுக்கிறோம் நிச்சயமாக நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை இருக்கிறது.

 முதல்வர் எங்களுக்கு கொடுத்த விஷயங்களை சொன்னாலும் பிரதான கோரிக்கை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு நிறைவேற்றபடவில்லை பழைய பென்ஷன் திட்டமும் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தார் அதனை நிறைவேற்றவில்லை.

  இதனை நிறைவேற்றிட கோரி தமிழக அரசுக்கு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம் மாற்ற கட்சிகள் எங்களின்   கோரிக்கைகளை 2026 சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதிகளில் சேர்த்தாலும் அவர்கள் எப்படிநிறை வேற்றுவார்கள் என விவாதித்து முடிவு செய்வோம்.

 அரசு ஊழியர்கள் மிரட்டப்பட்டால் அதனை எதிர்த்து குரல் கொடுப்போம் என கூறினார் பேட்டியின் போது சேகர்.ஜனார்த்தனன்,தீனதயாளன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.