ஆளுங்கட்சிக்கு ஜல்ரா போட்ட அதிகாரிகள்! எம் .எல். ஏ. பெயரை கல்வெட்டில் தவிர்த்ததால் பிரச்சனை!

ஆளுங்கட்சிக்கு ஜல்ரா போட்ட அதிகாரிகள்! எம் .எல். ஏ. பெயரை கல்வெட்டில் தவிர்த்ததால் பிரச்சனை!

 கு.அசோக்,

 குடியாத்தம் அருகே சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறப்பு விழா- அமைச்சர் காந்தி மற்றும் துரைமுருகன் பங்கேற்கும் நிலையில் தனது பெயரை கல்வெட்டில் போடவில்லை எனக்கூறி கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி நிகழ்ச்சியை புறக்கணித்து சென்றார்.உடனடியாக கல்வெட்டில் எம்எல்ஏ பெயரை ஸ்டிக்கரில் ஒட்டிய அதிகாரிகள்.

  வேலூர் மாவட்டம், குடியாத்தம் கொண்டசமுத்திரம் காளியம்மன்பட்டி பகுதியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

  இந்நிலையில், நிகழ்ச்சி நடைபெற்ற கொண்டசமுத்திரம் ஊராட்சி கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி எனவும்,மேலும் கைத்தறி பூங்கா திறப்பு கல்வெட்டில் தொகுதி எம்எல்ஏவான புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி அவர்களின் பெயர் பதிவு செய்யவில்லை.

  ஆகவே நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே புறக்கணித்து ஜெகன் மூர்த்தி சென்று விட்டார்.அப்போது அந்த நிகழ்ச்சிக்கு வந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தி தனது பெயரை கல்வெட்டில் புறக்கணித்து குறித்து கூறினார்.

   இதனையடுத்து இது குறித்து விசாரணை மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்தார். மேலும் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் கே.வி. குப்பம் தொகுதி எம்எல்ஏ வின் பெயரை அவரது சொந்த தொகுதியிலேயே பெயர்  போடாமல் புறக்கணிப்பதாக கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ரி

 இதனையடுத்து உடனடியாக கல்வெட்டில் தற்காலிகமாக கே.வி. குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தியின் பெயர் ஸ்டிக்கரால் ஒட்டப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கும் நேரத்திற்கு முன்பு எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி நிகழ்ச்சியை புறக்கணித்து சென்றதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.