5 கோடி மோசடியாம்! லஞ்ச அதிகாரியிடம் விசாரிக்க அனுப்பாமல் இருந்தால் நலம்!

5 கோடி மோசடியாம்! லஞ்ச அதிகாரியிடம் விசாரிக்க அனுப்பாமல் இருந்தால் நலம்!

 ஜி.கே.சேகரன்,

 வேலூரில் வீடு கட்டித்தருவதாகவும் திருமண செலவுக்காக என பொய் சொல்லியும் சுமார் ரூ.5 கோடி மோசடி பாதிக்கப்பட்ட மக்கள் தனித்தனியாக காவல்நிலையத்தில் புகார் மோசடி செய்து தலைமறைவானவர்களை கைது செய்து பணத்தை மீட்டுத்தருமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை.

வேலூர்மாவட்டம், சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் தேவி,சூர்யா,சிந்து ஆகிய 4பேரும் ஒரே குடும்பத்தினர்.

 இவர்கள் சத்துவாச்சாரி பகுதியில் பலரிடம் வீடு கட்டி தருவதாகவும் இடம் வாங்கி தருவதாகவும் மகள் திருமண செலவுக்கு என கூறி பல்வேறு பொய்களை சொல்லி பலரிடம் சுமார் ரூ.5 கோடி ரூபாய் கடன் வசூல் கொண்டு தலைமறைவாகிவிட்டனர்.

 இந்நிலையில் தற்போது அவர்கள் சென்னையில் வடபழனி ராகவன் காலணியில் வசிப்பதாக தற்போது தகவல் தெரியவந்துள்ளது.

  எனவே பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தனித்தனியாக புகார் மனுவை அளித்துள்ளனர்.

  இதில் ரூ.5 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக முதற்கட்டமாக தெரியவந்துள்ளது காவல்துறையினர் இவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து தங்களின் பணத்தை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்தனர்.

   பொதுவாக இவ்வளவு பெரிய தொகை மோசடி என்கிற புகார் எழுந்தார்ல் மாவட்ட குற்றப்பிரிவுக்கு புகார் பரிந்துரைக்கப்படும்.

  சமீபத்தில் இப்பிபிரிவுக்கு புது அதிகாரி வந்த பின்னர், நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்ட புகார்கள் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்று காவல் உயர் அதிகாரிகள் கவனித்தால் நலம். ஏன்னா நாம் இங்கு சுட்டிக்காட்டும் அதிகாரி லஞ்சம் பெற்றதாக ஏற்கனவே சிறை  சென்று வந்தவர்.