தூசு கிளப்பிய லாரிகளை ரவுண்டு கட்டிய மக்கள்! பறந்துவந்த அதிகாரிகள்!
கு.அசோக்,
நெமிலி அருகே சென்னை பெங்களூர் அதிவிரைவு சாலை பணிகளுக்காக மண் எடுத்து செல்லும் லாரிகள் சிறை பிடிப்பு. பள்ளி நேரங்களில் லாரி ஓடாது என அதிகாரிகள் உறுதியின் பேரில் லாரிகளை விடுவித்த பொதுமக்கள்.
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே சென்னை டு பெங்களூர் அதிவிரைவு சாலை பணி நடைபெற்று வருகிறது.இந்த சாலை பணிக்காக பனப்பாக்கம் அருகே உள்ள ஆலப்பாக்கம் பகுதியில் இருந்து லாரிகள் மண் எடுத்து செல்கின்றன.
இந்நிலையில் மண் எடுத்துச் செல்லும் லாரிகள் பள்ளி நேரங்களில் அதிவேகமாக செல்வதாகவும் கூறுகின்றன.

அதுமட்டுமல்லாமல் மண் எடுத்துச் செல்லும் பொழுது மண் மீது எவ்வித தார்ப்பாயும் போடாமல் திறந்த படி எடுத்துச் செல்வதால் புழுதிகள் பறந்து லாரியின் பின் வரும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் கூறுகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த நெடும்புலி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மண் ஏற்றி வந்த 15-க்கும் மேற்பட்ட லாரிகளை சிறை சிறைபிடித்தனர்.தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் பள்ளி நேரங்களில் லாரிகள் வராது என உறுதி அளித்ததின் பேரில் லாரியை விடுவித்தனர்.

admin
